Latest Updates
-
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்
வைகாசி விசாகம் 2024: முருகனை இப்படி வழிபட்டால் நினைத்தது நடக்கும்...!
Vaikasi Visakam 2024: முருகப் பெருமான், வைகாசி விசாகத்தன்று தன்னுடைய ஆறு திருமுகங்களிலும் அருள் மழையைப் பொழிவார் என்பதால் இந்த நாளில் முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது என சொல்லப்படுகிறது. இந்த வருடம் மே 22 தான் வைகாசி விசாகம் கொண்டாடப்படுவதாக பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இந்நாளில் முருகனின் அருள் கிடைக்கப்பெற்றால் நினைத்தது நினைத்தபடி நடக்குமென்பது நம்பிக்கை. குறிப்பாக திருச்செந்தூரில் வைகாசி விசாக பெருவிழாவின் அனைத்து நாட்களிலும், கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் முருகன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முருகப் பெருமான், வைகாசி விசாகத்தன்று தன்னுடைய ஆறு திருமுகங்களிலும் அருள் மழையைப் பொழிவார் என்பதால் இந்த நாளில் முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது என சொல்லப்படுகிறது.

எப்படி வழிபட வேண்டும்?
தமிழ் கடவுளான முருகப் பெருமான் பலருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கக் கூடியவர். என்ன பிரச்சனை என்றாலும், என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலும் கந்தனின் காலை பிடித்தால், வந்த வினையும், வருகின்ற வினையும் ஓடி விடும் என்பது நம்பிக்கை. வேலை, திருமணம், குழந்தைப் பேறு, கடன், பண கஷ்டம், மனை மற்றும் வீடு தொடர்பான பிரச்சனை, நோய்கள், காரிய வெற்றி என எதை வேண்டினாலும், விரதம் இருந்து வழிபட்டாலும் சகல நலன்களையும் தரக் கூடியவர் முருகப் பெருமான். இவரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்.
இது தவிர வீடுகளில் மயிலிறகு, சிறிய அளவிலான வேல் வைத்து வழிபடலாம், பெரிய வேலாக இருந்தால் வாங்கி கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம். செம்பால் ஆன வேல் வைத்து வழிபடலாம். முருகனுக்கு உரிய உலோகம் செம்பு. அதனால் செம்பால் ஆன மோதிரம் போன்று செய்து கையில் அணிந்து கொள்ளலாம். செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து, முருகன் வழிபாட்டிவை மேற்கொள்ளலாம். வீட்டில் செம்பருத்தி செடி நட்டு வைத்து வளர்ப்பது, முழு துவரையை அடிக்கடி உணவில் பயன்படுத்துவது, துவரம் பருப்பினையும் அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் யோகங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்.
புராணக்கதை
முருகன் என்றாலே சஷ்டிதான் முதலில் ஞாபகம் வரும். திதியில் சஷ்டியைப் போல நட்சத்திரத்தில் கிருத்திகைக்குப் பிறகு விசாக நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த தீப்பொறியிலிருந்து ஆறு குழந்தைகள், சரவணப்பொய்கையில் தோன்றின. அதுவே கார்த்தைகை நட்சத்திரம். இந்நிகழ்வானது வைகாசி மாதம் பவுர்ணமி அன்று நடைபெற்றதாக புராணங்கள் கூறுகிறது.
வைகாசி விசாகம் எப்போது?
2024 ஆம் ஆண்டு, வைகாசி மாதத்தில் அதாவது மே 22ம் தேதி புதன்கிழமை வருகிறது. மே 22ம் காலை 08.18 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஞானம், செல்வ வளம், நீண்ட ஆயுளை பெற, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை பெற விரும்புபவர்கள் வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானுக்கு விரதம் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications