Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசிக்காரங்கள காதலிச்சா உங்க வாழ்க்கை டெய்லி போராட்டம்தானாம்... உங்க காதலர் ராசி என்ன?
காதல் உறவுகள் ஆரோக்கியமானதாக இருக்க சில அவசியமான குணங்கள் தேவை. அதில் முக்கியமானது சமரச உணர்வு. எல்லோருமே தாங்கள் சமரச உணர்வு கொண்டவர்கள் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும், ஆனால் உண்மை என்னவென்று நம் எதிரில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று.
நீங்கள் காதல் உறவில் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான உங்கள் விருப்பம் உங்கள் காதல் இயக்கவியலைப் பொறுத்தது. இரு கூட்டாளிகளும் ஒருவருக்கொருவர் தங்கள் நிலையைப் புரிந்துகொண்டு சில மாற்றங்களைச் செய்யத் தயாராக இருந்தால், காதல் உறவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால் நிலைமை வேறுவிதமாக இருந்து, இருவரும் பிடிவாதாங்க இருந்தால் அந்த உறவு நரகத்தை விட மோசமானதாக இருக்கும்.

சிலர் காதலில் எப்போதும் தங்கள் நிலையை விட்டு இறங்கி வர மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடிப்பவர்கள். அவர்கள் தங்கள் உறவில் எப்போதும் அதிகாரம் தங்கள் கையில் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். எதற்காகவும் சமரசத்திற்கு இறங்கி வரமாட்டார்கள். அவர்களை காதலிப்பவர்கள் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் கருத்துக்கள் மீது வலுவான நம்பிக்கைக் கொண்டவர்கள். எனவே, அவர்களின் முடிவுகளை மாற்றுவதற்கு அவர்களை சமாதானப்படுத்துவது கடினம். எனவே, அவர்கள் ஒரு உறவில் நுழையும்போது, அவர்கள் சமரசம் செய்வது மிகவும் சவாலானது. அவர்கள் காதலிக்க சிறந்தவர்கள் ஆனால் சூடான உரையாடலை அவர்களால் கையாள முடியாது. ஒரு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவது எப்போதும் அவர்களின் துணையின் கையில்தான் இருக்கும்.
பல நேரங்களில், அவர்களின் துணை அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியம் முழிப்பார்கள். வாக்குவாதத்தை வளர்ப்பதற்காக பதிலாக தலைப்பை மாற்றுவதே சிறந்த வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதுவே அவர்கள் காதலில் செய்யும் மிகப்பெரிய தவறாகும். பிரச்சினைகள் மீதான அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றாத வரை அவர்களின் காதல் ஒருபோதும் அடுத்த நிலையை அடையாது.
சிம்மம்
சிம்மம் மிகவும் பிடிவாதமான ராசி அறிகுறிகளில் ஒன்றாகும். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படாதவர்கள். சமரசம் செய்ய போராடும் கடுமையான ராசிகளில் இதுவும் ஒன்றாகும். அவர்கள் தங்களைப் பற்றிக் கவலைப்படுவதைப் போல தங்கள் துணையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சிம்ம ராசிக்காரர்கள் நம்ப வைப்பது மிகவும் கடினம். அவர்கள் எந்த விஷயத்தையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதன் விளைவாக சிம்ம ராசிக்காரர்களை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினம்.
உண்மையில் சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த காதலர்களாக இருப்பார்கள். ஆனால் காதலில் சமரசத்தைத் தவிர அனைத்தையும் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்கள். ஒருமுறை காதலில் பிரச்சினை எழுந்து விட்டால் அவர்களின் துணை இறங்கி வந்து கெஞ்சினால் மட்டுமே அது முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை எப்போதும் அமைதியாக வைத்திருக்கும்படி நடந்து கொண்டால் அவர்கள் சிறந்த காதலர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் தைரியத்தை உறுதியாக நம்புகிறார்கள் மற்றும் சுய நம்பிக்கையை ஊக்குவிக்கிறார்கள். எனவே அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களால் காதலில் தியாகம் செய்ய முடியாது என்பது வெளிப்படையானது.
அவர்கள் தங்கள் துணை மீது எப்போதும் தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும், காதலில் தங்களுக்கே அதிக உரிமை இருப்பதாகவும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் பயமற்றவர்களாகவும் பிடிவாதமாகவும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் எதையாவது சரி என்று நினைத்தால், அதிலிருந்து எப்போதும் மாற மாட்டார்கள். விருச்சிக ராசிக்காரர்களின்காதல் துணை அனைத்து சமரசங்களையும் செய்வதால் மட்டுமே அவர்களின் உறவு நீண்ட நாள் நீடிக்கும்.
கும்பம்
கும்பம் இயற்கையாகவே காதல் உறவில் ஆதிக்கம் செலுத்துபவர்கள். மேலும், அவர்கள் தங்கள் எண்ணங்களில் பிடிவாதமாக இருக்கிறார்கள். சிறிய விஷயங்கள் முதல் தீவிரமான சூழ்நிலை வரை அனைத்திலும் அவர்கள் பிடிவாதமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் விரும்பினால் மட்டுமே தங்கள் மனநிலையை மாற்றுகிறார்கள்.
அவர்கள் உரையாடல்களை விவாதங்களாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளனர், குறிப்பாக ஒரு தலைப்பைப் பற்றிய வலுவான கருத்தை அவர்கள் வைத்திருக்கும் போது அதில் ஜெயிக்க வேண்டுமென்கிற எண்ணம் அவர்களுக்கு அதிகமிருக்கும். அவர்கள் தங்கள் துணை மீது பெரும்பாலும் ஆணவமாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள், அவர்கள் எந்த விலையிலும் சமரசம் செய்ய இறங்கி வரமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications












