Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப்போகுது!
Trigrahi Yoga In Aquarius After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் சனி பகவான் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கும்ப ராசியில் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து மார்ச் 07 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் கும்ப ராசியில் நுழையப் போகிறார். இதனால் கும்ப ராசியில சனி, சூரியன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கையால், திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகிறது. முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் இந்த யோக காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். நிதி நிலை எதிர்பாராத அளவில் வலுவடையும். உங்களின் பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை குறித்த சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த யோகத்தால் அலுவலகத்தில் செயல்திறன் மேம்பட்டு, பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதுவரை கிடைக்காத தந்தையின் ஆதரவு இந்த யோக காலத்தில் கிடைக்கும். இதனால் எப்பேற்பட்ட வேலைகளையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications