Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
உலகின் மிகவும் பாதுகாப்பான டாப் 5 நாடுகள்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? இவ்வளவு கீழ இருக்கா?
உலகம் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டே வருகிறது. தற்போது மூன்றாம் உலகப்போர் தொடங்கக்கூடிய சூழல் நிலவுவதால் உலகின் பல நாடுகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. பல நாடுகளில் மதரீதியான அச்சுறுத்துதல்கள் உள்ளது. இப்படி போர்களுக்கும், அச்சறுத்தல்களுக்கும் நடுவில் உலகம் இருக்கும் போது இது எதுவுமே பாதிக்காத சில பாதுகாப்பான நாடுகள் உள்ளன.
இந்த நாடுகளில் குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாக உள்ளன மற்றும் இந்த நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்கிறார்கள். ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட Institute for Economics and Peace(IEP) நிறுவனம் தயாரித்த The Global Peace Index (GPI) உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகள் என்னென்ன என்பதை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் என்னென்ன அதில் இந்தியாவின் நிலை என்னவென்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஐஸ்லாந்து
உலகளாவிய அமைதி குறியீட்டின் (GPI) படி, ஐஸ்லாந்து தொடர்ந்து 15வது ஆண்டாக உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 3,82,000 என்ற சிறிய மக்கள்தொகையைக் கொண்ட இந்த நாட்டில், மக்களின் உயர்தர வாழ்க்கை, நல்ல கல்வி மற்றும் குறைந்த மக்கள் தொகை காரணமாக இங்கு மிகக் குறைவான குற்றங்களே நடக்கிறது. இந்த நாட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அவர்களுக்கென்று சொந்த இராணுவம் கூட இல்லை.
டென்மார்க்
உலகின் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான நாடுகளில் டென்மார்க் இரண்டாம் இடத்தில் உள்ளது, இந்த நாடு அதன் குடிமக்களுக்கு சமத்துவத்தை அளிக்கிறது, இதனால் சமூக வெறுப்பு போன்ற சிக்கல்கள் இங்கு அறவே இல்லை. டென்மார்க் அரசியல் நம்பிக்கை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் மக்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர்.
அயர்லாந்து
பெரிய போராட்டங்களுக்கும், புரட்சிக்கு பிறகு பிறந்திருந்தாலும் இன்று அயர்லாந்து உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும், இங்கு குற்ற விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நாடு அதன் குடிமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது. அதனால்தான் உலகின் மிகவும் சுற்றுலா நட்பு நாடுகளில் ஒன்றாக அயர்லாந்து உள்ளது.
நியூசிலாந்து
உலகின் நான்காவது பாதுகாப்பான நாடாக நியூசிலாந்து உள்ளது, இங்கு குற்ற விகிதம் மிகவும் குறைவாக உள்ளது, இங்கு வன்முறை குற்றங்கள் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலையில் உள்ளது. நியூசிலாந்து மக்கள் மிகவும் வெளிப்படையானவர்களாகக் கருதப்படுகிறார்கள், மேலும் அந்த நாடு கருத்துச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பேச்சுரிமை போன்றவற்றை ஊக்குவிக்கிறது.
ஆஸ்திரியா
முதல் உலகப்போர் தொடங்கிய இடமாகவும், இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த ஆஸ்திரியா, இன்று அதன் குடிமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. குறைந்த குற்ற விகிதம் கொண்ட ஆஸ்திரியாவில் வன்முறை குற்றங்கள் மிகவும் அரிதாகவே நடக்கிறது.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
GPI அறிக்கையின்படி, 163 நாடுகளில் இந்தியா 116வது இடத்தில் உள்ளது, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், மத மோதல்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இப்போதும் ஆபத்தான குற்ற விகிதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் குற்ற விகிதங்கள் பல வளர்ந்த நாடுகளை விட மிக அதிகமாக உள்ளது.



Click it and Unblock the Notifications

