Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
சொன்னா நம்பமாட்டீங்க... இந்த 5 விலங்குகளுக்கு மனிதனின் மரணத்தை முன்கூட்டியே அறியும் சக்தி இருக்குதாம்..
மனித வாழ்க்கையானது புதிர் நிறைந்தது என்றே கூறலாம். இவ்வுலகில் பிறப்பது முதல் இறப்பது வரை வாழ்வில் பலவிதமான மாற்றங்களை காணக்கூடும். ஆனால் ஒருவரது பிறப்பு, திருமணம், இறப்பு போன்றவை ஒருவருக்கு எப்போது நடக்கும் என்பதை மட்டும் யாராலும் சரியாக கூற முடியாது.
இவற்றில் திருமணம் மற்றும் பிறப்பை தற்போது ஒருவர் நேரம், காலம் பார்த்து அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் இறப்பை நிச்சயம் யாராலும் சரியாக கூற முடியாது. ஆனால் சாஸ்திரங்களின் படி, ஒருசில விலங்குகளுக்கு மனிதனின் இறப்பை கணித்து முன்னறிவிக்கும் ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து அமானுஷ்யவாதிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சியின் படி, 5 விலங்குகளுக்கு மனிதனின் மரணத்தை முன்னறிவிக்கும் சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இப்போது அந்த விலங்குகள் எவையென்பதைக் காண்போம்.
நாய்கள்
நாய்களால் ஒரு மனிதனின் மரணத்தை முன்கூட்டியே உணர முடியும். உங்கள் வீட்டில் நாய்களை வளர்த்து வரும் போது, வீட்டில் இருப்போருக்கு மரணம் நெருங்கினால் வீட்டில் இருக்கும் நாய் அழத் தொடங்கும். எனவே தான் வீட்டில் உள்ள நாய் அழுதால் வீட்டிற்கு நல்லதல்ல என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
பூனைகள்
நாய்க்கு அடுத்தப்படியாக வீட்டில் வளர்க்கும் மற்றொரு செல்லப் பிராணி தான் பூனை. பழங்காலத்தில் இருந்தே பூனைகள் மரணத்தை முன்னறிவிப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதுவும் ஜோதிடத்தின் படி, ஒரு வீட்டில் 2 பூனைகள் சண்டை போடுவது நல்லதல்ல. அப்படி போட்டால், அது அந்த வீட்டில் மரணம் நிகழப் போகிறது என்று அர்த்தம் என கூறப்படுகிறது.
கருப்பு நிற பட்டாம்பூச்சி
பலவண்ண பட்டாம்பூச்சிகள் மங்களகரமானவை. ஆனால் கருப்பு நிற பட்டாம்பூச்சி மரணத்தின் தூதர் என்று கூறுப்படுகிறது. சொல்லப்போனால் கருப்பு நிற பட்டாம்பூச்சியை அந்துப்பூச்சி என்றும் அழைப்பர். இந்த கருப்பு நிற பட்டாம்பூச்சி இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தால், அது அபசகுனமாக கருதப்படுகிறது.
வௌவால்
மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்கள் மரணச் செய்தியைக் கொண்டு வருவதாக பலர் நம்புகின்றன. அதுவும் தென் அமெரிக்க பகுதிகளில் வௌவால்களை மரணத்தின் தூதர்களாக கருதுகின்றனர். அதனால் தான் வௌவால்கள் வீட்டிற்குள் வருவது நல்ல சகுனம் அல்ல என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
நரி
பகல் வேளையில் ஒரு நரி வீட்டிற்குள் நுழைந்துவிட்டால், அந்த வீட்டில் யாராவது இறப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் நரிகள் எப்போதும் பகலில் காணப்படாது. அதோடு நரிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து எப்போதும் விலகி தான் இருக்கும். எனவே பகலில் வீட்டிற்குள் ஒரு நரி வருவது, வீட்டிற்குள் மரணம் வரப் போகிறது என்று அர்த்தம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications