Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
உலகில் மக்கள் மிகவும் சோகமாக இருக்கும் டாப் 10 இதுதான்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
பூமியில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு பிரச்சினை உள்ளது. இருப்பினும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பல உள்ளது. அதேசமயம் பல்வேறு சிக்கல்களால் மிகவும் சோகமாக இருக்கும் நாடுகளும் பல உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கை, நாடுகளுக்கு இடையேயான வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த பட்டியலில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் நாட்டில் ஊழல் விகிதம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உலகெங்கிலும் உள்ள நாடுகளை ஒப்பிடுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, உலகின் மிகவும் சோகமான நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்கானிஸ்தான்
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது, இது 147வது இடத்தில் உள்ளது. நாட்டின் குறைந்த மதிப்பீடு அதன் மோசமான வாழ்க்கைத் தரத்தைக் குறிக்கிறது, தாலிபான்களின் ஆட்சியின் கீழ் இது போர் மற்றும் சமூக அடக்குமுறையால் மோசமடைந்துள்ளது. இங்குள்ள குடிமக்கள் அவர்கள் விருப்பப்படி வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது.
சியரா லியோன்
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன், உலகின் இரண்டாவது சோகமான நாடாகும், இது மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் 146-வது இடத்தில் உள்ளது. நீண்ட காலமாக நாட்டில் நிலவும் அரசியல் நிலையற்றத்தன்மை மற்றும் வறுமைக்குக் காரணமாக இருந்த உள்நாட்டுப் போரால் இந்த நாடு இந்த இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
லெபனான்
லெபனான் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 145 வது இடத்திலும், சோகமான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, இது அரசியல் ஊழல் மற்றும் சமூக அமைதியின்மையால் தூண்டப்படுகிறது, இது அதன் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக பாதிக்கிறது.
லெசோதோ
தென்னாப்பிரிக்க நாடான லெசோதோ, அதன் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள், மிகவும் முக்கியமாக குடிமக்கள் எதிர்கொள்ளும் அதிக அளவிலான எச்.ஐ.வி. காரணமாக சோகமான நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே எதிர்கொள்ளும் நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, சுகாதார அறிக்கையில் ஜிம்பாப்வே 143-வது இடத்தில் உள்ளது, அதேபோல மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது பட்டியலில் உள்ளது. நாட்டின் பொருளாதார பிரச்சினை பணவீக்கம் மற்றும் அரசாங்கப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது, இது அதன் குடிமக்களை பெரும்பாலும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
காங்கோ
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் காங்கோ ஜனநாயகக் குடியரசு 142வது இடத்தில் உள்ளது, அதற்கான முக்கிய காரணம் அங்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரும் மற்றும் மோசமான வறுமையும் ஆகும்.
மலாவி
தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக மலாவி சோகமான நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் கடுமையான குறைபாடுகளைக் கொண்ட உலகெங்கிலும் உள்ள ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மலாவி சுகாதார அறிக்கையில் 141-வது இடத்தில் உள்ளது.
கொமொரோஸ்
தீவு நாடான கொமொரோஸ் 139-வது இடத்தில் உள்ளது. நாட்டின் இந்த மிகப்பெரிய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அரசியல் அமைதியின்மை மற்றும் வளர்ச்சியடையாத பொருளாதாரமும்தான்.
தான்சானியா
தான்சானியா 138-வது இடத்தில் உள்ளது, தான்சானியா உலகின் மிகவும் அழகிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அங்கு நிலவும் அரசியல் குழப்பங்கல் தான்சானியாவை வறுமை மற்றும் மோசமான கல்வி வசதிகளைக் கொண்ட நாடாக மாற்றியுள்ளது.
மொசாம்பிக்
மொசாம்பிக் 137-வது இடத்தில் உள்ளது, மேலும் இங்குள்ள மக்கள் தற்போது அதிக வறுமையாலும், சுகாதாரப் வசதிகள் கிடைப்பதிலும் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதனாலதான் சோகமான நாடுகளின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 147 நாடுகளில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது, கடந்த ஆண்டு இந்தியா 126-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது, இருப்பினும் மதவாத மோதல்கள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் போதுமான திட்டமின்மை இந்தியாவை பின்னுக்குத் தள்ளுகிறது.



Click it and Unblock the Notifications

