Latest Updates
-
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள் இதுதான்... தமிழ்நாடு எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Richest States In India: உலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அதன் பன்முகத்தன்மை வாய்ந்த 28 மாநிலங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு (GSDP) தனித்துவமாக பங்களிக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமான வழிகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
சில மாநிலங்களின் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. அதேசமயம் சில மாநிலங்கள் சுற்றுலா மற்றும் வர்த்தகம் மூலம் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டுகின்றன. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி, 2024-2025 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மகாராஷ்டிரா
இந்தியாவின் அசைக்க முடியாத பொருளாதார சக்தியாக மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது, 2024-2025 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா ₹42.67 லட்சம் கோடி வருமானத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம், சினிமா, வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட போன்ற தொழில் அதன் முதுகெலும்பாக உள்ளது. இந்தியாவின் முக்கிய நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவன அலுவலகங்கள் மும்பையில் அமைந்துள்ளன, அதனால்தான் மும்பை இந்தியாவின் பொருளாதார தலைமையகமாக உள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாடு இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு வருடத்திற்கு ₹31.55 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை எதிர்பார்க்கும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி, ஜவுளித்துறை, வாகன உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். அது மட்டுமின்றி வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளுக்கு ஏற்ற புவியியல் அமைப்பும் இங்கு நிலவுவது பொருளாதாரத்தை உயர்த்துகிறது.
கர்நாடகா
2024-2025 நிதி ஆண்டில், கர்நாடகாவின் பொருளாதாரம் ₹28.09 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய தொழில்களில் உற்பத்தி, பயோடெக்னலாஜி, விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். குறிப்பாக, கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு "இந்தியாவின் சிலிக்கான் தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது.
குஜராத்
குஜராத் மாநிலம் பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தி மூலம் நாட்டின் முக்கிய தொழில்துறை மையமாக மாறியுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டில் ₹27.9 லட்சம் கோடிக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், அதன் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அந்நிய முதலீடுகளின் விளைவாக மாநிலத்தின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்
2024-2025 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹24.99 லட்சம் கோடியை எட்டியது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இதன் பொருளாதார வளர்ச்சியின் முதன்மை ஆதாரம் அரிசி, கோதுமை மற்றும் கரும்பு உற்பத்தியை உள்ளடக்கிய வேளாண் துறையாகும். உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களின் விரிவாக்கத்தால் மாநிலத்தின் பொருளாதாரம் சமீபத்தில் வலுவடைந்துள்ளது.
மேற்கு வங்கம்
வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் பொருளாதாரம் உற்பத்தி, சேவைகள் மற்றும் விவசாயத்தை நம்பியுள்ளது. தற்போது மேற்கு வங்கத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹18.8 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக நெல் மற்றும் சணல் உற்பத்தி செய்யும் மாநிலம் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வளர்ந்து வருகிறது.
ராஜஸ்தான்
2024-2025 ஆம் ஆண்டிற்கான ராஜஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹17.8 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா, சுரங்கம் மற்றும் விவசாயம் என பல்வேறு துறைகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
தெலுங்கானா
தெலுங்கானாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் ₹16.5 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் பயோடெக்னலாஜி ஆகியவற்றால் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மாநில தலைநகரான ஹைதராபாத், ஒரு ஐடி மையமாக இருப்பதால், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளையும் ஈர்க்கிறது.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியின் முதன்மை ஆதாரம் விவசாயமாகும். 2024-2025 ஆம் ஆண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹15.89 லட்சம் கோடியாக உள்ளது. தோட்டக்கலையும் இங்கு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்து வருகிறது.
மத்திய பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம், சுரங்கம் மற்றும் வனத்துறை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது, இது 2024-2025 ஆம் ஆண்டில் அதன் மொத்த மாநில உற்பத்தியை ₹15.22 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. சோயாபீன்ஸ், கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் முக்கிய உற்பத்தியாளராக, இந்த மாநிலம் பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.



Click it and Unblock the Notifications
