Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..
இந்தியாவில் அதிக அசைவ உணவுகள் சாப்பிடும் டாப் 10 மாநிலங்கள்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Meat Consumption States in India: இந்தியா பல்வேறு கலாச்சாரங்களும், பண்பாடுகளும் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்த நாடாகும். இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது அதன் உணவுப்பழக்கங்களிலும் நீள்கிறது. இவை பெரும்பாலும் இந்திய கலாச்சாரம், மதம் மற்றும் புவியியல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் சைவ உணவுகளை நுகர்பவர்கள் அதிகமாக இருந்தாலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இறைச்சி நுகர்வு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் இறைச்சி நுகர்வுக்கு முக்கிய காரணம் நகரமயமாக்கல் மற்றும் குறிப்பாக புரதச்சத்து நிறைந்த உணவுகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாகும். தேசிய சுகாதார மற்றும் குடும்ப கணக்கெடுப்பு (NFHS-5) அறிக்கையின்படி, அதிக இறைச்சியை உண்ணும் டாப் 10 இந்திய மாநிலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நாகாலாந்து
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் நாகாலாந்தில்தான் அதிக அசைவ உணவு உண்பவர்கள் உள்ளனர். இங்கு, இறைச்சி நுகர்பவர்களின் எண்ணிக்கை 99.8% ஐ விட அதிகமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்தில் பன்றி இறைச்சி, கால்நடைகள், எருமைகள் மற்றும் கோழி இறைச்சிகள் மக்களின் உணவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 99.3% மக்கள் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கிறார்கள். இதன்மூலம் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சியுடன், வங்காள உணவு வகைகளின் மையமாக மீன் உள்ளது.
கேரளா
கேரளா மக்களுக்கு மாட்டிறைச்சி மீதிருக்கும் தீராக்காதல் நாம் அறிந்ததுதான், அதன் மக்கள் தொகையில் 99.1% பேர் இறைச்சியை உட்கொள்கிறார்கள். இருப்பினும், மாட்டிறைச்சி மட்டுமின்றி ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் சேர்த்து கோழி இறைச்சியும் கேரள மக்களின் உணவுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம் அதன் கடலோர இருப்பிடத்தின் தாக்கத்தால் 98.25% இறைச்சி நுகர்வை பதிவு செய்துள்ளது, இதன்மூலம் நான்காவது இடத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் சிக்கனை அதிகம் உட்கொள்கிறார்கள், அதைத் தொடர்ந்து ஆட்டிறைச்சி மற்றும் மீனை அதிகம் உட்கொள்கிறார்கள்.
தமிழ் நாடு
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு இறைச்சி உண்ணும் மக்கள் தொகை உள்ளது, தமிழநாட்டில் கிட்டதட்ட 97.65% மக்கள் அசைவ உணவுகளை உட்கொள்கிறார்கள். செட்டிநாடு சிக்கன், ஆட்டிறைச்சி, இறால் மற்றும் மீன் என பெரும்பாலான மக்கள் பல்வேறு அசைவ உணவுகளை விரும்பி உண்கிறார்கள்.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் மிக நெருக்கமாகப் பின்தொடர்கிறது, அதன் மக்கள் தொகையில் 97.3% க்கும் அதிகமானோர் இறைச்சியை உட்கொள்கிறார்கள். பாரம்பரிய உணவுகளில் பெரும்பாலும் கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீன் ஆகியவை அடங்கும்.
ஜார்கண்ட்
கிழக்கு மாநிலமான ஜார்கண்டிலும் 97% க்கும் அதிகமான மக்கள் இறைச்சி உண்பவர்களாக உள்ளனர். கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீன் ஆகியவை மாநிலத்தில் பிரபலமான அசைவ உணவுகளாக உள்ளன.
ஒடிசா
ஒடிசா மக்கள் தொகையில் சுமார் 96% பேர் அதிக இறைச்சியை உட்கொள்கிறார்கள். இந்த மாநிலத்தில் மீன், கோழிக்கறி மற்றும் ஆட்டிறைச்சி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவு வகைகள் மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றன.
திரிபுரா
திரிபுராவில் 95% க்கும் மேற்பட்ட மக்கள் இறைச்சி உண்ணும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த மாநில மக்களின் உணவுகளில் பன்றி இறைச்சி, மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவை அடங்கும், அவை அதன் பன்முகத்தன்மை கொண்ட மரபுகளை பிரதிபலிக்கின்றன.
கோவா
கோவா 93.8% மக்கள் தொகையுடன் பத்தாவது இடத்தில் உள்ளது, இங்கு போர்த்துகீசிய தாக்கம் காரணமாக கடல் உணவு மற்றும் மாட்டிறைச்சி பிரதான உணவுகளாக உள்ளன.



Click it and Unblock the Notifications

