Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்திய வரலாற்றின் சக்திவாய்ந்த டாப் 10 அரசர்கள் இவங்கதான்..இதில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவங்க..யார் தெரியுமா
இந்தியாவின் வரலாறு என்பது பல அரசர்கள் மற்றும் ராணிகளின் வீரம், தியாகம் மற்றும் துரோகம் போன்றவற்றால் உருவாக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக நம் நாட்டின் கலாச்சாரம், அரசியல் மற்றும் இராணுவ வலிமை போன்றவை பல இந்திய அரசர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. பேரரசுகளை உருவாக்குவது முதல் கலாச்சாரங்களை கட்டமைப்பது வரை, பல ஆட்சியாளர்கள் இன்றும் இந்திய வரலாற்றில் நிலைபெற்றிருக்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான கண்ணோட்டம் மற்றும் வலிமை உள்ளது. சிலர் தங்கள் ராஜ்ஜியங்களை மிகப்பெரிய அளவில் வளர்த்தனர், சிலர் துணிச்சலுடன் படையெடுப்புகளிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்தனர். அவர்களின் முடிவுகளும், செயல்பாடுகளும் இந்திய வரலாற்றில் அவர்களுக்கு நிலையான பெயரை பெற்றுத்தந்தது. இந்திய வரலாற்றின் செழுமையையும், பன்முகத்தன்மையையும் வடிவமைத்த இந்தியாவின் வலிமை வாய்ந்த ஆட்சியாளர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 321-297)
சந்திரகுப்த மௌரியர் பண்டைய இந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றான மௌரியப் பேரரசை நிறுவியவர். அவர் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்த முதல் அரசராக விளங்கினார். அது அந்தக் காலத்தில் ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அதற்கு முன்னால் இருந்த நந்த வம்சத்தை தனது ஆலோசகர் சாணக்கியரின் உதவியின் மூலம் பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி நந்த வம்சத்தை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தார்.
அசோகர் (கி.மு. 268-232)
சந்திரகுப்தரின் பேரனான அசோகர், இந்திய வரலாற்றில் மிகவும் பிரபலமான மன்னர்களில் ஒருவர். இன்று வரை அவரது பெயர் வரலாற்றில் தவிர்க்க முடியாததாக உள்ளது. கலிங்கப் போர் என்று அழைக்கப்படும் இந்தியாவின் மிகவும் கொடூரமான போருக்குப் பிறகு, அவர் புத்த மதத்தைப் பின்பற்றுபவராக மாறினார். புத்த மதத்திற்கு மாறிய பின் அசோகர் தனது பேரரசு முழுவதும் அமைதி, கருணை மற்றும் மத சகிப்புத்தன்மையை ஊக்குவித்தார்.
சமுத்திரகுப்தர் (கி.பி. 335-380)
"இந்தியாவின் நெப்போலியன்" என்று அழைக்கப்படும் சமுத்திரகுப்தர், வட இந்தியா முழுவதும் குப்தப் பேரரசை விரிவுபடுத்தினார். அவரது ஆட்சிதான் இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கமாகக் கூறப்படுகிறது. அவர் இறக்கும் போது, அவர் 20-க்கும் மேற்பட்ட ராஜ்ஜியங்களை இணைத்திருந்தார், மேலும் அவரது இராணுவ வலிமை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அண்டை மாநிலங்களை வரி செலுத்தும் துணை நாடுகளாக மாற்றியது. கலைகளின் தீவிர புரவலரான அவரது ஆட்சி இசை, அறிவியல், இலக்கியம் மற்றும் மத சுதந்திரத்தை வளர்ப்பதற்கும் காரணமாக அமைந்தது,
ஹர்ஷ வர்தன (கி.பி. 606-647)
ஒட்டுமொத்த வட இந்தியாவின் மன்னராக ஹர்ஷர் இருந்தார். அவர் பல சிறிய ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து ஒரு ஐக்கியப் பேரரசை உருவாக்கினார். இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தது மட்டுமின்றி ஹர்ஷர் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் சிறந்த ஆதரவாளராக இருந்தார். அவர் புத்த மதத்தைப் பரப்ப உதவினார் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்களை வரவேற்று மாநாடுகளை நடத்தினார். அசோகருக்குப் பிறகு இந்தியாவில் புத்த மதத்தை தீவிரமாக பரப்பியவர் இவர்தான்.
முதலாம் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985-1014)
தமிழ் மக்களிடையே சோழ வம்சம் இப்போதும் பலமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவில் பாண்டிய மற்றும் சேர ராஜ்ஜியங்களின் கூட்டணி மற்றும் இலங்கையில் சிங்கள ராஜ்ஜியங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது. ராஜ ராஜ சோழன் 994 இல் தாக்குதலைத் தொடங்கினார், மேலும் பல ஆண்டுகள் கடுமையான சண்டையைத் தொடர்ந்து இறுதியில் பாண்டிய மற்றும் சேரர்களை வென்றார்.
சோழப் பேரரசை மிகவும் சக்திவாய்ந்த பேரரசராக ராஜ ராஜ சோழன் மாற்றினார். அவர் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி, வலுவான கடற்படையைக் கட்டினார். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டியதன் மூலம் வரலாற்றில் அழியாத இடம் பெற்றார்.
முதலாம் ராஜேந்திர சோழன் (ஆட்சி கி.பி. 1014-1044)
ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் தனது தந்தையின் வழியிலேயே சோழப் பேரரசை மேலும் விரிவுபடுத்தினார். அவர் சோழ கடற்படையை வலிமையாக்கி, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வர்த்தகப் பாதைகளை உருவாக்க உதவினார். இது இந்திய கலாச்சாரத்தையும், கருத்துக்களையும் உலகம் முழுவதும் பரப்பியது. தமிழ் நாட்டிலிருந்து மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட அரசர் இவர்தான்.
பிரித்விராஜ் சௌஹான் (கி.பி. 1177-1192)
முஸ்லீம் படையெடுப்பாளர்களை எதிர்த்துப் போராடிய மிகச்சிறந்த ராஜபுத்திர மன்னர்களில் பிருத்விராஜ் சௌஹானும் ஒருவர். உண்மையில், முகமது கோரிக்கு எதிரான போர்களுக்காக அவர் மிகவும் பிரபலமானவர், அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த போர் இந்திய வரலாற்றின் மிகவும் முக்கியமான போர்களில் ஒன்றாகும், இருப்பினும் அவர் போரில் இறுதியில் தோற்றார். அவர் துணிச்சலானவராகவும், கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் அறியப்பட்டார். அவரது வீரம் போலவே அவரது காதல் கதையும் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும்.
ஷேர் ஷா சூரி (ஆட்சி கி.பி. 1540-1545)
ஷேர் ஷா சூரி சூரி பேரரசின் நிறுவனர் ஆவார். இந்தியாவில் அவர் அறிமுகப்படுத்திய பல குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு அவர் பிரபலமானவர், உதாரணமாக ரூபாய் என்ற ஒரு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது அவர்தான். நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த சாலைகள் மற்றும் பிற பயனுள்ள உள்கட்டமைப்புகளையும் அவர் உருவாக்கினார்.
அக்பர் (கி.பி 1556-1605)
இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களில் முகலாயர்கள் மிகவும் முக்கியமானவர்கள். முகலாயர்களின் தாக்கம் இன்றுவரை இந்தியாவில் தொடர்கிறது. ஜஹாங்கீர், ஷாஜஹான் போன்ற பல சக்திவாய்ந்த ஆட்சியாளர்கள் முகலாய வம்சத்தில் தோன்றியிருந்தாலும் முகலாயப் பேரரசின் மிகவும் பிரபலமான ஆட்சியாளராக பேரரசர் அக்பர் இருந்தார். அவர் இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்தார், மேலும் அவரது மத சகிப்புத்தன்மை கொள்கைக்காக அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். அவர் கலை, கட்டிடக்கலை மற்றும் கற்றலையும் ஊக்குவித்தார், இது அவரது ஆட்சியை முகலாயப் பேரரசின் பொற்காலமாக மாற்றியது.
சிவாஜி போன்ஸ்லே (1627-1680)
சிவாஜி போன்ஸ்லே சத்ரபதி சிவாஜி என்றும் அழைக்கப்படுகிறார். முகலாயர்களை தீவிரமாக எதிர்த்த சிவாஜி இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்தியாவின் போர் முறைகளில் சிவாஜி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். இன்று வரை சிவாஜியின் வாழ்க்கை வரலாறு தொடர்ந்து திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவரது புகழுக்கும், இந்திய வரலாற்றில் அவர் ஏற்படுத்திய தாக்கதிற்கும் இதுவே பெரிய சான்றாகும்.



Click it and Unblock the Notifications












