Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
இந்தியாவில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்படும் டாப் 10 மாநிலங்கள்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
Top 10 Flood-Affected States In India: இந்தியாவின் புவியியல் அமைப்பு மற்ற நாடுகளை விட மிகவும் வித்தியாசமானது. இந்தியாவில் மிகவும் பொதுவான மற்றும் அதிக சேதத்தை ஏற்படுத்தும் இயற்கை பேரழிவுகளில் ஒன்று வெள்ளம். ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தின் போது, பல மாநிலங்கல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன, இதனால் பல மாநிலங்களில் நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடைகின்றன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர்களும் பலியாகின்றன.
சில மாநிலங்கள் அவற்றின் இருப்பிடம், புவியியல் மற்றும் மழைப்பொழிவின் அளவு காரணமாக மற்ற மாநிலங்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன. பீகார், அசாம், உத்தரபிரதேசம் மற்றும் வேறு சில மாநிலங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றன, இது கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கி, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. வெள்ளம் சொத்துக்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்துகிறது. இதற்கு இயற்கை ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளது. இந்த பதிவில் இந்தியாவில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்படும் டாப் 10 மாநிலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பீகார்
பீகாரில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 38 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டு, 39.76 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பீகார் இந்தியாவிலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாநிலமாக உள்ளது. இதற்கு முதன்மையான காரணம், இமயமலையிலிருந்து சமவெளிகளுக்குள் பாயும் கங்கை, கோசி மற்றும் கண்டக் போன்ற ஆறுகள் நிரம்பி வழிவதே ஆகும். மழைக்காலங்களில் பலவீனமான கரைகள் மற்றும் போதுமான வடிகால் இல்லாததால் நிலைமை மோசமடைகிறது.
அசாம்
பிரம்மபுத்திரா நதி பாயும் பள்ளத்தாக்கில் அசாம் அமைந்திருப்பதால், அது கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது மாநிலமாக உள்ளது. அசாமில் 35 மாவட்டங்களில் சுமார் 24.65 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலப்பரப்பு உள்ளது. கடுமையான மழை பெய்யும் காலங்களில் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகள் பெருக்கெடுப்பதால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
உத்தரப் பிரதேசம்
உத்தரபிரதேசத்தில் உள்ள 72 மாவட்டங்களில் 26.63 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. பருவமழை காலத்தில், கங்கை, யமுனா மற்றும் காக்ரா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய ஆறுகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான நிலப்பரப்பு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் ஏற்படும் ஏராளமான மழைப்பொழிவு காரணமாக மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்காளத்தில் 20 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு, 19.69 லட்சம் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. கங்கை மற்றும் அதன் துணை நதிகள் நிரம்பி வழிவது, கடலோர மழை மற்றும் புயல்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. ஆறுகளில் வண்டல் படிவு மற்றும் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் திட்டமிடப்படாத வளர்ச்சி பணிகள் சேதத்தை அதிகரிக்கின்றன.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளம் 24 மாவட்டங்களில் 7.38 லட்சம் ஹெக்டேர் நிலங்களை பாதித்துள்ளது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா போன்ற ஆறுகள் ஒவ்வொரு ஆண்டும் நிரம்பி வழிகின்றன, குறிப்பாக புயல்கள் மற்றும் கடுமையான பருவமழைகளின் போது மாநிலத்தின் ஆபத்து மேலும் அதிகரிக்கிறது.
தமிழ்நாடு
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 5.52 லட்சம் ஹெக்டேர் நிலங்களை வெள்ளம் பாதிக்கிறது. போதுமான வடிகால் வசதிகள் இல்லாததாலும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், சென்னை போன்ற நகரங்களில் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு ஒரு பொதுவான நிகழ்வாகும். ஒவ்வொரு நவம்பர் மாதமும் சென்னையின் நிலை என்னவாகிறது என்பதை நாம் நன்கு அறிவோம். புயல் மழை மற்றும் அணைகள் அதிகப்படியான நீரை வெளியேற்றுவதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
குஜராத்
குஜராத்தின் 16 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 5.17 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் சேதமடைந்துள்ளன. திடீரென அணைகள் திறக்கப்படுவதாலும், அதிக பருவமழை பெய்வதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் வசதி போதுமானதாக இல்லாததாலும் வெள்ளத்தால் இந்த மாநிலம் அதிகம் பாதிக்கப்படுகிறது.
கர்நாடகா
கர்நாடகாவில் 26 மாவட்டங்களில் சுமார் 2.80 லட்சம் ஹெக்டேர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழையின் விளைவாக கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா போன்ற ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இங்கு அதிகளவு நிகழும் மண் அரிப்பு மற்றும் காடழிப்பும் வெள்ளத்திற்கு காரணமாகின்றன.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் 20 மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் 2.33 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. பருவமழைக் காலத்தில், கோதாவரி மற்றும் கிருஷ்ணா போன்ற ஆறுகள் நிரம்பி வழிகின்றன, மேலும் மும்பை போன்ற நகரங்கள் கனமழை மற்றும் மோசமான வடிகால் அமைப்புகளின் விளைவாக நீரில் மூழ்குகின்றன.
மத்திய பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் ஆண்டுதோறும் 30 மாவட்டங்களும் சுமார் 2.10 லட்சம் ஹெக்டேர் நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் மத்திய மலைப்பகுதிகளில் இருந்தாலும், தாழ்வான நதிப் படுகைகள் மற்றும் கடுமையான பருவமழை காரணமாக அருகிலுள்ள பகுதிகள் நர்மதா மற்றும் பெட்வா போன்ற ஆறுகளால் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications
