Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்தியாவின் டாப் 10 மோசமான ரயில் நிலையத்தில் முதலிடம் பிடித்துள்ள தமிழ்நாடு... எந்த ஊர் ஸ்டேஷன் தெரியுமா?
Top 10 Dirtiest Railway Stations in India: இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இந்தியாவில் கிட்டதட்ட 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ரயில்களை நம்பியுள்ளனர். அதனால்தான் இந்தியாவின் ரயில்வே நிர்வாகம் இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக உள்ளது.
இந்திய ரயில்வே நாடு முழுவதும் 7,349 ரயில் நிலையங்களை இயக்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான ரயில் நிலையங்கள் நவீனமாக மாற்றியமைக்கப்பட்ட போதிலும், நாட்டில் சில ரயில் நிலையங்கள் இன்னும் மோசமான நிலையில்தான் உள்ளன, இந்த ரயில் நிலையங்களுக்கு நவீன காலத்துக்கு ஏற்ப பெரிய அளவிலான கவனிப்பும், மேம்படுத்தலும் தேவைப்படுகிறது.

இந்தியாவின் மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் என்று வரும் போது நாம் அது உத்தரப் பிரதேசம், பீகார் அல்லது ஒரிசாவில் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்தியாவின் மிகவும் அசுத்தமான ரயில் நிலையமாக தமிழ்நாட்டை சேர்ந்த ரயில் நிலையம் தேர்ந்தெடுப்பட்டுள்ளது. இந்த பதிவில் இந்தியாவில் மோசமான நிலையில் இருக்கும் ரயில் நிலையங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பெருங்களத்தூர் ரயில் நிலையம்
தெற்கு ரயில்வே மண்டலத்தின் சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் ரயில் நிலையம், இந்திய ரயில்வேயின் Rail Swachh Portal-ன் படி, இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
ஷாகஞ்ச் ரயில் நிலையம் (உத்தரப்பிரதேசம்)
உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரில் உள்ள ஷாகஞ்ச் நகரில் அமைந்துள்ள NSG-3 வகை ரயில் நிலையமான ஷாகஞ்ச் சந்திப்பு ரயில் நிலையம், இந்தியாவின் மிகவும் அசுத்தமான ரயில் நிலையங்களில் இடம்பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையம் மட்டுமின்றி உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு ரயில் நிலையங்கள், நாட்டிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையங்களாக உள்ளது.
சதார் பஜார் ரயில் நிலையம் (டெல்லி)
தேசிய தலைநகரின் மத்திய டெல்லி மாவட்டத்தில் அமைந்துள்ள சதார் பஜார் ரயில் நிலையம் நாட்டின் மிகவும் அசுத்தமான நிலையங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. Rail Swachh Portal-ன் படி, மோசமான வடிகால் வசதி மற்றும் குப்பைகள் அதை மிகவும் அசுத்தமான நிலையங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.
ஒட்டப்பாலம் ரயில் நிலையம் (கேரளா)
சுத்தம் மற்றும் சுகாதாத்திற்கு பெயர் பெற்ற கேரளாவின் ரயில் நிலையமும் இந்த பட்டியலில் உள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள, தெற்கு ரயில்வே மண்டலத்தின் பாலக்காடு ரயில்வே பிரிவின் கீழ் உள்ள ஒட்டப்பாலம் நிலையமும் இதில் இடம் பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையம் 2021 இல் புதுப்பிக்கப்பட்ட போதிலும், இந்தியாவின் மிகவும் அசுத்தமான நிலையங்களில் ஒன்றாக அது உள்ளது.
பிற ரயில் நிலையங்கள்
இந்த ரயில் நிலையங்களைத் தவிர, பாட்னாவில் உள்ள பீகார் ரயில் நிலையங்கள், முசாபர்பூர் மற்றும் அராரியா கோர்ட், உத்தரபிரதேசத்தில் ஜான்சி மற்றும் பரேலி ரயில் நிலையங்கள் மற்றும் தமிழ்நாட்டில் வேளச்சேரி மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்கள் உட்பட போன்றவை இந்தியாவின் மிகவும் அசுத்தமான நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவின் டாப் 10 அசுத்தமான ரயில் நிலையங்கள்:
- பெருங்களத்தூர் (தமிழ்நாடு),
- கிண்டி (தமிழ்நாடு),
- டெல்லி சதர் பஜார்,
- வேளச்சேரி (தமிழ்நாடு),
- கூடுவாஞ்சேரி (தமிழ்நாடு),
- சிங்கபெருமாள்கோயில் (தமிழ்நாடு),
- ஒட்டப்பாலம் (கேரளா),
- பழவந்தாங்கல் (தமிழ்நாடு,
- அராரியா கோர்ட் (பீகார்)
- குர்ஜா (உத்தர பிரதேசம்)
இந்த பட்டியல் எப்படி தயாரிக்கப்பட்டது?
இந்த பட்டியல் இந்திய தரக் கவுன்சில் (QCI) வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது, இது நேரடி கண்காணிப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை அவற்றின் தூய்மையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்த 1.2 மில்லியன் பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. QCI ரயில் நிலையங்கள் வரும் வருவாய் மற்றும் பிற அளவீடுகளின் அடிப்படையில் ரயில் நிலையங்களை பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது.
QCI அறிக்கையின்படி, இந்தியாவில் 75 ரயில் நிலையங்கள் A1 பிரிவில் அடங்கும், அவை ஆண்டுக்கு ரூ.75 கோடிக்கும் அதிகமாக வருமானத்தை ஈட்டுகின்றன, அதே நேரத்தில் 332 நிலையங்கள் A நிலையங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, இந்த ரயில் நிலையங்கள் மூலம் ரூ.6 கோடி முதல் ரூ.50 கோடி வரை வருவாய் ஈட்டுகிறது.



Click it and Unblock the Notifications
