Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
உலகளவில் அதிக கடன் வாங்கியுள்ள டாப் 10 நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
International Monetary Fund (IMF) அறிக்கைப் படி தற்போது உலகில் பெரும்பாலான நாடுகள் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இது அந்த நாடுகளின் பொருளாதார சவால்களையும், அவை சர்வதேச நிதி உதவியை நம்பியிருப்பதையும் பிரதிபலிக்கிறது. இந்தியா பெற்றுள்ள கடனும், தமிழ்நாடு வாங்கியுள்ள கடனும் தற்போது அடிக்கடி தலைப்பு செய்தியாக மாறிவரும் நிலையில் இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி IMF வழங்கிய நிதி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. IMF அறிக்கையின் படி தற்போதைய நிலவரத்தில் உலகில் அதிக கடன் பிரச்சினையுடன் இருக்கும் நாடுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அர்ஜென்டினா - $40.26 பில்லியன்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அர்ஜெண்டினா. உலகிலேயே அர்ஜென்டினா International Monetary Fund-டம் அதிக கடனைக் கொண்டுள்ளது. பணவீக்கம், நாணய நெருக்கடி மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் அர்ஜென்டினா போராடி வருகிறது. அதன் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பல ஆண்டுகளாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெருமளவில் கடன் வாங்கியுள்ளது. இப்போது அந்த கடன் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
உக்ரைன் - $10.8 பில்லியன்
இந்த பட்டியலில் உக்ரைன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ரஷ்யாவுடனான தொடர்ச்சியான போர் காரணமாக, உக்ரைனின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மறுகட்டமைப்பு, இராணுவச் செலவு மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஆதரிப்பதற்காக, உக்ரைன் 2022 முதல் IMF இலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை கடனாக வாங்கி வருகிறது.
எகிப்து - $8.46 பில்லியன்
இந்த பட்டியலில் எகிப்து மூன்றாம் இடத்தில் உள்ளது. எகிப்து அதிக பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளித்து வருகிறது. அதன் பொருளாதாரத்தை தொடர்ந்து சீராக வைக்கவும், ஏழைகளைப் பாதுகாக்கவும், சீர்திருத்தங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய ஆதரவிற்காக எகிப்து பல கோடிகளை IMF-டம் கடனாக பெற்றுள்ளது.
ஈக்வடார் - $6.37 பில்லியன்
ஈக்வடாரின் எண்ணெய் சார்ந்த பொருளாதாரம் எண்ணெயின் கடுமையான விலை வீழ்ச்சி மற்றும் அரசியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டது. கடனை நிர்வகிக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் IMF எகிப்துக்கு கடனை வழங்கி உள்ளது.
பாகிஸ்தான் - $6.10 பில்லியன்
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியாவுடனான தொடர்ச்சியான பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தான் IMF இலிருந்து $6 பில்லியனுக்கும் அதிகமாக கடன் பெற்றுள்ளது. இந்த கடன் தொகை பாகிஸ்தான் நாணயத்தை நிலைப்படுத்துதல், கடனைக் குறைத்தல் மற்றும் எரிபொருள் மற்றும் உணவு போன்ற அடிப்படை இறக்குமதிகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு கடனாக வாங்கப்பட்டுள்ளன.
கென்யா - $3.02 பில்லியன்
இந்த பட்டியலில் கென்யா ஆறாவது இடத்தில் உள்ளது. கென்யா அதிக பொதுக் கடன், பணவீக்கம் மற்றும் வறட்சி தொடர்பான சவால்களை எதிர்த்துப் போராடி வருகிறது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கும் IMF-டமிருந்து இவ்வளவு கடன்கள் பெறப்பட்டுள்ளன.
அங்கோலா - $2.83 பில்லியன்
எண்ணெய்யை அதிகம் நம்பியிருந்த அங்கோலா, உலகளாவிய எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரத்தை முன்னேற்றவும், கடனைக் கட்டுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவும் IMF கடனை வாரி கொடுத்துள்ளது.
கோட் டி ஐவரி - $2.63 பில்லியன்
மேற்கு ஆப்பிரிக்க நாடு கோட் டி ஐவரி இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளவும், பணவீக்கத்தை நிர்வகிக்கவும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிக்கவும் IMF கடன்களைப் பெற்றுள்ளது.
கானா - $2.46 பில்லியன்
கனாவின் அதிக கடன் அளவுகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவை IMF உதவியை நாட வேண்டிய நிலையை ஏற்படுத்தின. இந்த கடன் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், கடனை மறுசீரமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பங்களாதேஷ் - $1.98 பில்லியன்
பங்களாதேஷ் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பதால் வங்கதேசம் IMF-ன் உதவியை நாடியது. இந்தக் கடன் எரிசக்தி இறக்குமதியை ஆதரிக்கிறது மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த பட்டியலில் இந்தியா 13 வது இடத்தில உள்ளது.



Click it and Unblock the Notifications












