Latest Updates
-
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
வைகாசி பெளர்ணமியில் மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்..
Vaikasi Pournami 2024: தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயரும் மாதமே இந்த வைகாசி மாதம்.
வைகாசி மாதத்தில் வரும் மிக விஷேசமான ஒன்றுதான் வைகாசி பௌர்ணமி தினம். இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

ஒவ்வொரு மாத பௌர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி மிக விசேஷமானது. வைகாசி மாதத்தில் வரும் விஷாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதி ஏற்படும். விசாக நட்சத்திரம் குரு பகவானுக்கு உரியது. சூரியன் உதயமாகும் போது இருக்கும் திதியைக் கணக்கிடும் அடிப்படையில் வைகாசி மாத பௌர்ணமி மே 23ம் தேதியான இன்று வியாழக்கிழமை வருகிறது.
பொதுவாக விழானும் குருபகவானுக்கு உரிய நாளாகும்.. எனவவே இந்த வருடம் வரும் இந்த பௌர்ணமி மிகவும் விஷேசமானது. விசாக நட்சத்திரத்தில், வியாழன் அன்று வருவது. இன்று முருகப்பெருமானை வழிபடுவதோடு மட்டுமல்லாமல். வியாழன் அன்று தட்சிணா மூர்த்தி வழிபாடு, குருபகவான் வழிபாடு மற்றும் சிவபெருமான் வழிபாடு செய்வதும் உகந்தது.. மே 22, 2024 மாலை 7:15 மணியிலிருந்து பௌர்ணமி திதி தொடங்கி மே 23 இரவு 8 மணி வரை திதி உள்ளது..
செய்ய வேண்டியவை..
1. இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும்.
2. மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது.
3. இந்த வைகாசி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.
4. மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும்.
5. இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.
6. இத்தகைய சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும்.
செய்யக்கூடாதவை
1. மது அல்லது அசைவ உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்..
2. வெங்காயம், பூண்டு மற்றும் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
3. மற்றவர்கள் தயாரித்த உணவை உட்கொள்வதற்குப் பதிலாக நீங்களே உணவைச் சமைத்து சாப்பிடுங்கள்...
4. பொய், ஏமாற்றுதல் அல்லது சூதாட்டம் போன்ற ஒழுக்கக்கேடான நடத்தைகளில் ஈடு படுவதைத் தவிர்க்க வேண்டும்..
5. இந்த நாள் நேர்மறை மற்றும் ஆன்மீகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதால், வன்முறை மற்றும் ஒழுக்கக்கேடான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்..
6. முக்கியமாக இன்று உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு மறுக்காமல் உதவி புரிவது நல்லது..



Click it and Unblock the Notifications