Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
Today Rasi Palan 29 August 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 29ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டை ஏற்படலாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில் விஷயங்கள் மோசமாகிவிடும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறீர்கள். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்கவும். உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 2 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சில முக்கியமான பணிகளை ஒதுக்கலாம். உங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்யவும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், நீங்கள் அவர்களுக்கு நினைவூட்ட மறவாதீர்கள். இல்லையெனில் உங்கள் பணம் திரும்ப கிடைக்காமல் போகலாம். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் முக்கியமான விவாதம் நடத்தலாம். தொழிலதிபர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, அலுவலகத்தில், உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வியாபாரிகள் இன்று ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, தொழிலதிபர்களுக்கு நல்ல பொருளாதார லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை இருக்கக்கூடம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 9:50 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, வேலையில் இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். வணிகர்கள் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறுவார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க நீங்கள் உங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நீங்கள் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், அதிகரித்து வரும் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். வேலையில் இன்று கலவையான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், பருவகால நோய்களில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:15 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். இன்று நீங்கள் உங்களைப் பற்றிய முக்கிய முடிவையும் எடுக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களின் பெரிய பிரச்சனையும் தீரும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் எந்தவொரு கடினமான காரியமும் தடையின்றி முடிவடையும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பொழுதுபோக்கிற்காக சிறிது பணம் செலவழிக்கலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று திடீர் பண வரவு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் தடைபட்ட வேலை இன்று முடிவடையும் வாய்ப்பு அதிகம். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் அதிகப்படியான நம்பிக்கையைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் இன்று சங்கடப்பட வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சில முக்கிய தகவல்களைப் பெறலாம். இன்று நீங்கள் ஒரு முக்கிய நபரை சந்திக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் பெரும் பொருளாதார ஆதாயத்தைப் பெறலாம். உங்கள் தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:20 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். அளவிற்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். இது தவிர, நீங்கள் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை



Click it and Unblock the Notifications











