Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
Today Rasi Palan 28 July 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 28ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு நல்ல அறிகுறி தென்படும். தடைப்பட்ட உங்களின் முக்கியமான வேலைகள் அனைத்தும் முடிவடையும். நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடியுங்கள். பொய் கூறுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சி கெடும். வேலையைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்றால், பெரிய அளவில் முன்னேறலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 9:50 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். எதிர்பார்த்ததை விட அதிக பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். நிதி நிலை மேம்படும். நிதி நெருக்கடி காரணமாக, தடைபட்டிருந்த வேலைகள் இன்று முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் காலை 9:55 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். காலையில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். குழந்தை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டலாம். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். யோசிக்காமல் எந்த செலவும் செய்யாதீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, வேலை சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை முடிவுக்கு வரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் துணையின் வித்தியாசமான ரூபத்தை காண்பீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கை மனஅழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடையே ஒற்றுமை குலையலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். அலுவலகத்தில் விடாமுயற்சியுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கான மாற்றத்திற்கான நேரம் இது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, நிதி நிலையில் பலம் உண்டாகும். இன்று நீங்கள் எதிர்பார்க்காத வழியில் பணம் சம்பாதிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் தாங்கள் விரும்பிய பலனைப் பெற்றிடலாம். இன்று முதலாளி உங்கள் முன்னேற்றத்தைக் குறிப்பிடலாம். வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உங்களின் ஆசை நிறைவேறும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் வெளியே செல்லலாம். இன்று நீங்கள் அவர்களிடமிருந்து உங்களுக்கு பிடித்த பரிசுகளையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு தசைகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:05 மணி முதல் மாலை 6 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்திருந்தால், உங்கள் பணம் கிடைக்காமல் உங்கள் கவலை அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். துன்பத்தில், உங்கள் அன்பானவர்கள் உங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து துணையாக இருக்பார்கள். உங்கள் பிள்ளையின் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி, இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக தகவல் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 8 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று காதல் விஷயத்தில் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கும். மூன்றாம் நபரின் குறுக்கீடு காரணமாக, உங்களுக்கு இடையே இடைவெளி அதிகரிக்கலாம். இன்று உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், ஆடம்பர செலவுகள் செய்யாதீர்கள். உங்கள் வேலை தொடர்பான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். சரியான திசையில் முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 4 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க போகிறீர்கள் என்றால் உங்கள் வழியில் இருந்துவந்த தடைகள் நீங்கி வெற்றி பாதை திறக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் நீண்ட நாள் கவலை நீங்கி, ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 8:15 மணி வரை



Click it and Unblock the Notifications











