Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
Today Rasi Palan 25 September 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். செப்டம்பர் 25ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.15-7.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று பணம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையும் செய்யாமல் இருப்பது நல்லது. உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். இன்று உங்களுக்கு வேலையில் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களுக்கு கூடுதல் வேலைகள் ஒதுக்கப்படலாம். ஆனால், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உணர்ச்சி ரீதியான இணைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரத்தைப் பெறுவீர்கள். மனதளவில் மிகவும் நன்றாக உணர்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். சில குடும்ப பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உங்கள் அன்புக்குரியவரின் ஆதரவையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, புத்துணர்ச்சியுடனும், நிதானமாகவும் உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 8:55 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வீட்டின் பெரியவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். பேசும் போது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க நேரிடலாம். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் நம்பிக்கை குறையும். இன்று எந்தவொரு பெரிய செலவும் செய்யும் முன்பு, உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று கலவையான நாளாக இருக்கும். உங்கள் உடல்நிலையை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் உங்களின் முக்கிய வேலைகள் தடைபடலாம். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். வருமானத்தை விட அதிகமாக செலவு இருக்கும். அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடலாம். சோம்பல் காரணமாக, உங்கள் சில வேலைகள் முழுமையடையாததால் முதலாளியின் கோபத்திற்கு ஆளாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மதியம் 1 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் பேச்சில் கட்டுப்பாடு தேவை. இன்று, நீங்கள் நகைச்சுவைக்காக பேசி உங்களுக்கு நெருக்கமான ஒருவரை காயப்படுத்தலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். நீதிமன்ற விஷயத்தில் வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெற இன்று ஏற்ற நாள். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று திடீரென பயணம் செய்ய நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் குறையும். உங்களுக்கிடையேயான தூரம் அதிகரிக்கலாம். பணத்தின் அடிப்படையில் இன்று சராசரி நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நடத்தையில் அதிக கவனம் தேவை. தேவையற்ற கோபம் உங்கள் பெயரைக் கெடுத்துவிடும். அது உங்கள் வேலையில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 4 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய விஷயங்களைக் கற்று கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளுடனான உங்கள் ஒருங்கிணைப்பும் மேம்படும். வணிகர்களின் தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த இடத்துக்கு வெளியே செல்லலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:20 மணி முதல் மாலை 3:30 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நல்ல ஆரோக்கியத்தை பெற வேண்டுமெனில், அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைத் தேவை. விரைவில் நீங்கள் சரியான முடிவுகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் பெரிய பிரச்னை இருக்காது. மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பணம் தொடர்பான சில பரிவர்த்தனைகளையும் செய்யலாம். அலுவலகத்தில் உள்ள மேலதிகாரி உங்கள் செயல்திறனில் மிகவும் மகிழ்ச்சி அடைவார். இன்று அவர்கள் உங்களுக்கு சில புதிய மற்றும் பொறுப்பான வேலைகளை வழங்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:05 மணி முதல் காலை 7:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் இன்று சில புதிய உத்திகளை கையாளலாம். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால் உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கும். குறிப்பாக இன்று உங்கள் தாயுடன் சிறப்பாக நேரத்தைச் செலவிடுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அணுகுமுறை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். இத்தகைய சூழலில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5:30 மணி வரை



Click it and Unblock the Notifications