Today Rasi Palan 24 October 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகள் செய்ய உகந்த நாள்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 24ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 24 October 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 3.00-4.30 மணி வரை. குளிகை காலை 12.00-1.30 மணி வரை. எமகண்டம் காலை 9.00-10.30 மணி வரை. சூலம் - வடக்கு திசை. பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நண்பர்கள் உதவியுடன்ள் முக்கிய பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியும். மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:50 மணி முதல் மதியம் 12 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்வில் பதற்றமான சூழல் நிலவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய விவாதம் நடத்தலாம். வேலை தொடர்பான நீண்ட கால பிரச்சனைகள் தீர வலுவான வாய்ப்புள்ளது. கூட்டு வியாபாரம் செய்பவர்கள் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் மதியம் 2:50 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, வணிகர்கள் புதிய வேலையைத் தொடங்க இன்று சாதகமான நாள். உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை இன்று மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிடலாம். நீங்கள் தனிமையில் இருந்தால், இன்று வருங்கால துணையைச் சந்திக்கலாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையாது. உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவது உங்கள் உறவை பலவீனப்படுத்தும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். இதனால் உங்கள் பெரிய கவலைகள் நீங்கும். நிதி ரீதியாக இன்று விலை உயர்ந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் அவசர அவசரமாக எந்த வேலையும் செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு தூக்கமின்மை, தலைவலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வைப் பெறலாம். கடந்த கால நஷ்டத்தை ஈடுகட்ட வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, உங்கள் பரபரப்பான தினசரி வழக்கத்தால் இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். சில தவறால் பெரும் விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய நாள் பணத்தின் அடிப்படையில் சராசரி நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் இன்று பெரும் மாற்றம் தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வணிகர்கள் புதிய வேலையைத் தொடங்கலாம். நிதி நன்மைகள் சாத்தியமாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பண பரிவர்த்தனைகள் செய்ய இன்று ஏற்ற நாள். மாணவர்களின் உயர் கல்வி தொடர வெளிநாடு செல்ல விரும்பினால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் காலை 11:30 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. இன்று வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளியாட்கள் அதிகம் தலையிட அனுமதிக்காதீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்யவும். அதிகரிக்கும் மன அழுத்தத்தால் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். இன்று பணத்தைப் பொறுத்தவரை விலையுயர்ந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் முதலாளி உங்களுக்கு சில பொறுப்பான வேலைகளை ஒதுக்கலாம். உங்கள் வேலையை கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:25 மணி முதல் காலை 11 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். குறிப்பாக பெரியவர்களின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். பண விஷயமாக இன்று நல்ல நாளாக இருக்கும். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அனுபவமுள்ள ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் அதிகமாகும். கவலைகளை எல்லாம் மறந்து உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் நல்லது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்கள் நிதிப் பிரச்சனையும் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, உங்களுக்கு தொண்டை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 9 மணி வரை

Story first published: Tuesday, October 24, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion