Today Rasi Palan 23 November 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் வேலையை பாதிக்கலாம்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். நவம்பர் 23ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 23 November 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. மகம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று அலுவலகச் சூழல் சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வணிகர்கள் இன்று ஒரு பெரிய ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இன்று உங்கள் தந்தையிடமிருந்து சில முக்கிய ஆலோசனைகளைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, மாணவர்கள் சோம்பலைக் கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட காலமாக விரும்பிய வேலையைத் தேடிக்கொண்டிருந்தால், நீங்கள் நல்ல வாய்ப்பைப் பெறலாம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, உங்கள் குழந்தையின் கல்வி தொடர்பான கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். வணிகர்கள் எந்தவொரு சட்டவிரோதமான வேலைகளையும் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிதாக கூட்டு தொழில் தொடங்க திட்டமிட்டால், அவசரப்பட வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:05 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் நீண்ட நாட்களாக முழுமடையாத வேலையை இன்றே முடிக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் பெரிய லாபம் ஈட்ட ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். நீங்கள் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்கள் தினசரி வழக்கத்தை மாற்ற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:50 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, தொழில் ரீதியாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தொழிலதிபர்களின் பெரிய பிரச்சனைகள் இன்று தீர்க்கப்படும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல அறிகுறி தென்படும். கடந்த கால முதலீடுகளிலிருந்து நல்ல பலன்களைப் பெறலாம். இன்று உங்கள் கட்டுப்பாடற்ற கோபத்தைக் கட்டுப்படுத்தினால் நல்லது. இல்லையெனில் உங்களின் இந்த பழக்கம் உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உங்களை விலக்கிவிடும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:15 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் இன்று முடிவடையும். இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க முயற்சிப்பது நல்லது. வியாபாரிள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். இன்று எந்தவொரு முக்கிய வியாபார முடிவும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் அலட்சியமாக இருக்க வேண்டாம். இன்று நீங்கள் அன்றாட வேலைகளை முடிப்பதில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 7:20 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, சிறு வியாபாரிகளுக்கு இன்று ஏமாற்றம் தரும் நாளாக இருக்கும். வீட்டில் நடக்கும் பிரச்சனைகளால் இன்று உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்கள் உங்கள் வேலையை கெடுக்காமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலைமையைப் பொறுத்தவரையில், இன்று செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட சில வேலைகள் இன்று மீண்டும் தொடங்கலாம். இன்று நீங்கள் சில பெரிய மற்றும் முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியப்படுத்துவதைத் தவிர்க்கவும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். அவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். வானிலை மாற்றத்தால் சிறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 3 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு கலவையான பலன்களை தரும் நாளாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் தவறுகளை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சோர்வான நாளாக இருக்கும். வேலை நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். கவனக்குறைவால் உடல்நலம் கெடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இன்று விரும்பிய லாபத்தைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனைகள் இருக்காது. குழந்தைகளுக்காக சில முக்கியமான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று வீட்டு சூழ்நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் பணத்தை தேவையற்ற விஷயங்களுக்கு செலவிட வேண்டாம். இன்று வேலையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் பாதையில் தடைகள் இருக்கும். இன்று நீங்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நல பிரச்சனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மதியம் 12:45 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படலாம். அலுவலகத்தில் வேலை சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் உயர் அதிகாரிகளிடம் பேசுவதற்கு இன்று ஏற்ற நாள். வியாபாரிகள் இன்று பண விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கவும். உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சில பழைய நோய்கள் மீண்டும் தோன்றலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை

Story first published: Thursday, November 23, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion