Today Rasi Palan 21 August 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 21ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 21 August 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இருப்பினும், உங்களின் கடின உழைப்புக்கு உரிய பலன் விரைவில் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்றாடப் பணிகளை முடிப்பதில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9:25 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்கவும். பிறர் பேச்சை கேட்டு எதையும் செய்யாதீர்கள். தந்தையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு சரியான கவனிப்பு தேவை. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை சமநிலையில் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். காலையில் சில நல்ல செய்திகளையும் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் பணம் தொடர்பான சில பெரிய வேலைகளையும் செய்யலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் எல்லா வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:25 மணி முதல் காலை 10:05 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். மேலும், உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்பலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று புதிய வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 7:15 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, சில நாட்களாக உங்கள் உடல்நிலை குறித்து கவலைப்பட்டால், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். நகைச்சுவையாகச் சொல்வது கூட அவர்களின் மனதைப் புண்படுத்தும். இன்று நீங்கள் உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சிறப்பான தொடக்கமாக இருக்காது. உங்களின் முக்கியமான வேலைகளில் சில தடைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் அவசரமாக எந்த வேலையையும் செய்யாதீர்கள். இல்லையெனில், உங்கள் சிறிய கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உடல்நலம் சம்பந்தமான பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் நடத்தையில் மென்மைதன்மை இருக்கும். வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:50 மணி முதல் காலை 11 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, காதல் விஷயங்களில் இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் உறவைப் பற்றி நீங்கள் ஒரு பெரிய முடிவையும் எடுக்கலாம். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் பேசும் போது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் சிறிய தவறும் உங்களுக்கு பெரிய சிக்கலை உண்டு பண்ணும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்களின் சரியான முடிவிற்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்ற வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம். இன்று பண விஷயத்தில் மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். திடீர் பண வரவு இருக்கும். உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்தினால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் காலை 10:20 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தம் உங்கள் மீது அதிகரிக்கும். இதனால் உங்களில் ஆற்றலும் உற்சாகமும் குறையும். நீங்கள் எதிர்மறையாக உணரலாம். தேவையில்லாமல் சிந்தித்து மன அமைதியை குலைக்காமல் இருப்பது நல்லது. நேர்மறையாக இருப்பதோடு, தொடர்ந்து கடினமாக உழைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் தினமும் அலுவலகத்திற்கு தாமதமாக சென்றால், இன்று உங்களுடைய இந்த பழக்கம் சிக்கலில் ஆழ்த்தலாம். நீங்கள் இதை கவனித்துக்கொள்வது நல்லது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

Story first published: Monday, August 21, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion