Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
Today Rasi Palan 20 August 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனையை யோசிக்காமல் செய்யக்கூடாது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். நிதி நிலையை மேம்படுத்த அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. இன்று மேலதிகாரி உங்களைப் புகழ்வார். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 8:55 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்லலாம். வீட்டில் உள்ள ஒருவரிடமிருந்து உங்களுக்கு பிடித்த பரிசும் கிடைக்கும். அலுவலகத்தில் எந்தவொரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலனை விரைவில் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று வேலையில் கலவையான நாளாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் கடின உழைப்பால் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். எனவே போதுமான ஓய்வு தேவை. வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். உங்கள் அன்பானவர்களும் உங்களுக்கு சில நல்ல செய்திகளை கூறலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் காலை 11 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் துணையுடனான உறவில் மனகசப்பு ஏற்படலாம். உங்களுக்குள் எந்த மூன்றாம் நபரையும் தலையிட விட வேண்டாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும். இன்று நிதி பரிவர்த்தனைகள் செய்ய ஏற்ற நாள் அல்ல. அலுவலகத்தில், சோம்பலைத் தவிர்த்து, உங்கள் முக்கிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4:20 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சரிவிற்கான அறிகுறிகள் தென்படும். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். வேலையுடன், குடும்பத்துடனும் போதுமான நேரத்தை செலவிட முயற்சிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் காதல் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் பாதையில் பெரிய தடை இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று சில பெரிய நிதி பரிவர்த்தனைகளையும் செய்யலாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு சில முக்கியமான பொறுப்புகளும் வழங்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை இருக்கும். உங்களின் சில முக்கியமான பணிகள் முழுமையடையாமல் இருக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் விருப்பத்திற்கு மாறாக கூட நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் கல்வி தொடர்பான எந்த முக்கிய பிரச்சனையும் தீரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. புதிய வருமானத்தைப் பெறலாம். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். எதிர்கால திட்டங்களை பற்றியும் விவாதிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, பாதகமான சூழ்நிலைகளில், நீங்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அவசரப்பட்டு செய்யும் விஷயத்தால் பின்னர் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிடவும். மேலும், எந்தவொரு நிதி பரிவர்த்தனையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட தவறான பாதையைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 9:50 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, நீங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. குழந்தைகளின் பிடிவாத குணம் உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் நல்ல நாளாக இருக்கும். ஒருவர் மீது ஒருவரருக்கு உணர்வு ரீதியான பற்று அதிகரிக்கும். வேலை அடிப்படையில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் காலை 11 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, திருமண வாழ்வில் சூழ்நிலை இனிமையாக இருக்கும். உங்கள் துணையின் மனதை அறியும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இன்று சில ஆடம்பர செலவுகளை செய்யலாம். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் பெரிய முன்னேற்றம் அடைய முடியும். ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். ஆனால் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை



Click it and Unblock the Notifications