Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
Today Rasi Palan 16 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நற்செய்திகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.30-8.30 மணி வரை. மாலை 4.30-5.30 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. ஹஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் சிறந்த நாளாக இருக்கும். வியாபாரிகள் இன்று நிலுவையில் உள்ள லாபத்தைப் பெறுவார்கள். இன்று நீங்கள் ஒரு முக்கியமான வணிக முடிவை எடுக்கலாம். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அன்புக்குரியவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இன்று நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து உங்களுக்கு பிடித்த பரிசைப் பெறலாம். நாளின் இரண்டாம் பகுதியில் பணம் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு சில தசை சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். குறிப்பாக வேலை தொடர்பான முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்புக்கு அலுவலகத்தில் நல்ல பலன் கிடைக்கும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இருந்தாலும் பெரிய பிரச்சனை இருக்காது. உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சாதகமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால் இன்று நேர்காணலுக்கான அழைப்பு வரலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். இன்று நீங்கள் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான முடிவுகளைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 8:20 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். வியாபாரிகள் இன்று திடீரென ஒரு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுடைய இந்த பயணம் மிகவும் சோர்வாக இருக்கும். ஆனால், நீங்கள் தகுந்த பலன்களைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மதிப்புமிக்க பரிசை வழங்கலாம். காதலைப் பொறுத்தவரை இன்று மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:15 மணி முதல் மாலை 4 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் சோம்பேறித்தனம் இன்று உங்கள் வேலையைக் கெடுத்துவிடும். உங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் ஆர்வத்துடனும் செய்தால் நல்லது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் காதல் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கலாம். அவசரப்பட்டு எந்தவொரு தவறான நடவடிக்கையும் எடுக்காதீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் சில வழிபாட்ட தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், உங்கள் மன அழுத்தம் கணிசமாகக் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. நீங்கள் மிகவும் பலவீனமாக உணரலாம். உணவில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது. வீட்டில் பதற்றமான சூழல் நிலவும். இன்று வீட்டில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். வணிகர்கள் இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் தன்னம்பிக்கையின் பலத்தில் இந்த சிரமத்தை சமாளிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 9:50 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, வியாபாரத்தில் உங்களுக்கு லாபகரமான சூழ்நிலை இருக்கும். இன்று நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால், உங்கள் வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். திடீர் செலவுகள் கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர பற்றுதல் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் கல்வி தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எதிரிகள் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம். எனவே, நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல ஒருங்கிணைப்பை பேணுவது அவசியம். உங்களின் கோபம் அலுவலகத்தில் உங்கள் பெயரைக் கெடுத்துவிடும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உடல் சோர்வு அதிகரிக்கும். மேலும் நீங்கள் மனதளவில் நன்றாக உணர மாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சனை இன்று தீர்க்கப்படும். திருமணமானவர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் உங்களுக்கென நிறைய பொருட்களை வாங்கலாம். அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங்கில் நீங்கள் பங்கேற்கலாம். விரைவில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் தங்கள் பங்குகளை அதிகரிக்க விரும்பினால், இன்று அவர்களுக்கு சாதகமான நாள். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று மேலதிகாரி உங்களை மிகவும் பாராட்டலாம். வணிகர்கள் தங்கள் வணிக முடிவுகளை நம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். சிறு வியாபாரிகள் அரசின் திட்டங்களால் நல்ல பலன்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏதேனும் பரிசு போன்றவற்றை வழங்க நீங்கள் திட்டமிட்டால், இன்று அதற்கு சாதகமான நாள். இன்று உங்கள் அன்புக்குரியவர்களும் நல்ல மனநிலையில் இருப்பார்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் காலை 7:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். நீங்கள் திருமணமாகாதவராகவும், உங்களின் விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களாகவும் இருந்தால், உங்கள் தேடல் இன்றுடன் முடிவடையும். ஆரோக்கியம் மேம்படும். இன்று வேலை அழுத்தம் சற்று குறைய வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன்களைப் பெறலாம். நீங்கள் சமீபத்தில் ஏதேனும் தேர்வு எழுதியிருந்தால், நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிகப்படியான டீ மற்றும் காபி உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, தொழிலதிபர்களின் நிதிப் பிரச்சனைகள் இன்று தீரும். இன்று நீங்கள் கூட்டு வியாபாரம் தொடங்க நல்ல வாய்ப்பையும் பெறலாம். நீங்கள் அரசு வேலைக்குத் தயாராகி இருந்தால், புகழ்பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலைப் பெறலாம். நீங்கள் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தால், உங்கள் வருமானம் அதிகரிக்க வலுவான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். உங்கள் பேச்சிலும், நடத்தையிலும் அக்கறை இருந்தால் நல்லது. இனடறு நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை



Click it and Unblock the Notifications











