Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Today Rasi Palan 11 January 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துவது நல்லது..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.30-11.30 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. ரோஹிணி, மிருகசீருஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான வியாபாரம் செய்தால் இன்று இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் நிலை வலுவாக இருக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பானதாக இருக்காது. வருமானம் நன்றாக இருந்தாலும், அதிகரித்து வரும் செலவுகள் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:55 மணி முதல் காலை 9:50 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வேலை தொடர்பான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால், சில காரணங்களால் உங்கள் பயணம் தள்ளிப் போகலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். பண விஷயத்தில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். தந்தையின் உடல்நிலை மேம்படும். இதனால், முக்கிய கவலைகள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் எல்லா கவலைகளையும் மறந்து உங்கள் மீது கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று நீங்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட உங்களின் முக்கிய வேலை இன்று முடிவடையும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் வேலை தொடர்பான சில நல்ல ஆலோசனைகளைப் பெறுவீர்கள். வணிகர்கள் ஒரு பெரிய இலக்கை அடைய கடினமாக உழைக்கவும். திருமண வாழ்வில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:45 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, வேலை தொடர்பான புதிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. சமீபத்தில் செய்த சிறிய முதலீட்டில், எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:30 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்களுக்கிடையில் உள்ள பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். இருப்பினும், அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும். உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவைக் கெடுக்கும். இன்று உடல்நிலை மோசமடைந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் தங்கள் வணிகத் திட்டங்களில் சமீபத்தில் செய்த மாற்றத்தால், சிறப்பான முடிவுகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் திறமையை வெளிப்படுத்தும் பொன்னான வாய்ப்பைப் பெறலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை பேணவும். சில காலமாக உங்கள் வீட்டின் சூழல் சரியாக இல்லாவிட்டால், இன்று நீங்கள் அதில் பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மதியம் 12 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உணர்ச்சிவசப்பட்டு எந்த முக்கியமான முடிவுகளும் எடுப்பதைத் தவிர்க்கவும். இதனால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். பண விஷயத்தில் கலவையான பலன்களைத் தரும். வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்யுங்கள். இன்று நீங்கள் உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகள் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். இன்று உங்கள் உடல்நலம் பலவீனமாக இருக்கும். எனவே, ஓய்வில் அதிக கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:15 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். வேலையுடன் சொந்த தொழில் தொடங்க திட்டமிட்டால், இன்று அனுபவம் வாய்ந்த ஒருவரின் ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் உடன்பிறந்தோருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டால், இன்று உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உங்கள் மீது அதிக கவனம் செலுத்தினால் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 7:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். மோதல்களைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். மேலும் நீங்கள் சட்ட விஷயங்களிலும் சிக்கிக்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் குழுப்பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெரிய திட்டத்தில் பணிபுரிபவர்கள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு ஆழமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வணிகர்கள் இன்று பெரும் நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் தொழில் வேகமாக முன்னேறும். இன்று நீங்கள் சில ஆபத்தான முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகஸ்தர்கள் சில பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல வகையான எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். செலவுகளைக் கண்காணித்தால் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் நிறைய அலைய வேண்டியிருக்கலாம். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. நாளின் இரண்டாம் பகுதியில் பணி தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் தொடர்ந்து கவனக்குறைவாக இருந்தால், முக்கியமான சில வேலைகள் இன்று முழுமையடையாமல் இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கவும். பெரியவர்களிடம் பேசும் போது தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவயைான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 8 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகள் ஏதேனும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற இன்று பொருத்தமான நாள். அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் உடல்நலம் கடுமையாக மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை



Click it and Unblock the Notifications











