Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Today Rasi Palan 10 January 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் செலவுகளைக் குறைக்கணும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.30-8.30 மணி வரை. மாலை 4.30-5.30 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. கார்த்திகை, ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, வீட்டிற்கு திடீரென சில விருந்தினர்கள் வரலாம். இன்று உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவழிக்க வேண்டாம். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். கல்வி தொடர்பான எந்தவொரு முயற்சியிலும் சிறப்பான வெற்றியைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் வேலை சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொண்டால், உயர் அதிகாரிகளிடம் பேசுவதற்கு ஏற்ற நாள். உங்கள் பிரச்சினைக்கு நீங்கள் தீர்வு காண வாய்ப்புள்ளது. இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, வேலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் செயல்திறனை மேம்படுத்தி கொண்டால் உங்கள் முன்னேற்ற கனவு விரைவில் நிறைவேறும். வியாபாரிகள் இன்று பெரிய முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இன்று பணத்தின் அடிப்படையில் சராசரி நாளாக இருக்கும். நிதி நிலையை வலுப்படுத்த, உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்தவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாகும். நீங்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், அது தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். அதிகமாக சேமிக்க முடியும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், எல்லா வேலைகளையும் தடையின்றி செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, நீங்கள் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்கவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் நிதி முயற்சிகள் விரைவில் வெற்றியடையலாம். வேலையில் இன்று முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், தேவையில்லாமல் அலைவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 10:15 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நீங்கள் அவர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். இன்று நிலுவையில் உள்ள வேலைகளின் சுமை சற்று அதிகரிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். காதல் வாழ்க்கைப் பொறுத்தவரை, தேவையற்ற கோபம் மற்றும் ஈகோ உங்கள் உறவை பலவீனப்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கலாம். அலுவலகத்தில் உங்கள் நடத்தையில் கவனம் தேவை. உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் இன்று உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அன்புக்குரியவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:20 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, அலுவலகத்தில், உங்கள் மேலதிகாரி உங்களுக்கு சில முக்கியமான வேலைகளை வழங்கலாம். தொழிலதிபர்கள் இன்று நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். இன்று பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இன்று குடும்பத்துடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்றாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:50 மணி முதல் இரவு 9:05 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் உங்கள் நிதி நிலையைக் கெடுத்துவிடும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. சிறு விஷயத்துக்காக உங்களிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களைக் நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டால் நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் சரியான நடத்தையைப் பேணுங்கள். இன்று வியாபாரிகளுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். முக்கிய வணிக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:20 மணி முதல் மதியம் 2:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். இன்று அனுபவம் வாய்ந்த ஒருவரிடமிருந்து சில முக்கியமான ஆலோசனைகளைப் பெறலாம். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். இன்று உங்களுக்கு நிதி நன்மைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. சில புதிய வேலைகளைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். சில நாள்பட்ட நோய்களால் நீங்கள் கவலைப்பட்டால், இன்று உங்களுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் வீட்டில் அமைதியை நிலைநாட்ட, உங்கள் நடத்தையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். தேவையில்லாத சண்டைகளும் உங்கள் மன அமைதியைக் கெடுக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று அலுவலகத்தில் உங்கள் அனைத்து வேலைகளும் தடையின்றி முடிவடையும். இன்று உங்கள் முதலாளியும் உங்களைப் பாராட்டலாம். வியாபாரிகள் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எந்தவொரு பெரிய சவாலையும் உங்களின் புத்திசாலித்தனத்தால் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 11 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். நீங்கள் ஒரு புதிய வணிக முன்மொழிவையும் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். உங்கள் வருமானமும் கூடும். காதல் விஷயங்களில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இன்று உங்கள் துணை உங்களுக்காக விசேஷமாக ஏதாவது செய்யலாம். உங்கள் உறவு மேலும் வலுவடையும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவடையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 மணி முதல் மதியம் 12 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் சமீபத்தில் தொடங்கிய புதிய தொழிலில் லாபத்தைப் பெற புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை நன்றாக வைத்திருக்க முயற்சிக்கவும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, செலவுகளைக் குறைக்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை



Click it and Unblock the Notifications











