Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
Today Rasi Palan 06 October 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்பி விடக்கூடாது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 06ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 12.15-1.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பொருளாதார நிலைமையை வலுப்படுத்த வலுவான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். உங்கள் கல்வியில் சில தடைகள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தினசரி வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 4 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். இது உங்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும். பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக ஏதேனும் நிலுவையிலிருந்த முக்கியமான பணிகள் உயர் அதிகாரிகளின் உதவியால் இன்று முடிவடையும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் காலை 9:50 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று வீட்டில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவும். பணம் சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டால் நல்லது. இன்று நீங்கள் வேலையில் அதிக ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இதனால், இழப்பு சாத்தியமாகும். கிடைக்கும் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், இன்று உங்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் சிறந்த முடிவு உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்கள் ஒருங்கிணைப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். இன்று அவர்கள் உங்கள் செயல்திறனில் மிகவும் திருப்தி அடைவார்கள். இன்று உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 8:30 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, திடீர் செலவுகள் இன்று உங்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யும். உங்கள் செலவுகளை சரியாகக் கணக்கிடுவது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணை இன்று மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார்.உங்கள் உறவில் புதுமையை உணர்வீர்கள். வேலையின் அடிப்படையில், இன்று உங்களுக்கு கலவையான பலன்களைக் கொண்ட நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:10 மணி முதல் இரவு 7:35 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் இன்றாட பணிகள் தடைபடலாம். பண விஷயத்தில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். குறிப்பாக மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, அலுவலகத்தில் மிகவும் சீரான நடத்தையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். இன்று உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் நிலவிய பதற்றமான சூழல், இன்று சரியாகும். சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் கலவையான பலன்களைப் பெறலாம். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்பை இழக்க நேரிடலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் காதல் திருமணம் செய்ய விரும்பினால், அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் திடீரென்று உங்கள் பழைய நண்பரை சந்திக்க நேரிடும். அவர்களிடமிருந்து சில நல்ல மற்றும் முக்கியமான ஆலோசனைகளைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 5 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, குழந்தைகள் மூலம் இன்று மகிழ்ச்சி உண்டாகும். கல்வித்துறையில் அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய முடியும். அலுவலகத்தில் அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, பணம் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், உங்கள் பிரச்சனை இன்று தீர்க்கப்படும். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். இருப்பினும், உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். இன்று உங்களின் சில வேலைகள் கெட்டு போகலாம். வேலை அழுத்தம் அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்களின் மாறுபட்ட எண்ணங்கள் காரணமாக, இன்று குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு விரிசல் ஏற்படலாம். நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை மிகவும் புத்திசாலித்தனமாக முன்வைக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சேமிப்பு உயரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பும் நல்ல பலன் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை



Click it and Unblock the Notifications











