Latest Updates
-
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
Today Rasi Palan 04 October 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 04ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 5.00-6.00 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் அவசரமாக எந்த வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், உங்களின் முக்கிய முடிவுகளையும் சிந்தித்து எடுக்க வேண்டும். உங்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். இல்லையெனில், அவை திருடப்படவோ அல்லது தொலைந்து போகவோ வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு வேலையில் சுறுசுறுப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 10 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, வியாபாரிகள் இன்று கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான செயல்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வேலையில் சிறிதும் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் முதலாளி உங்களுக்கு எதிராக சில கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:05 மணி முதல் மாலை 4:30 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று உங்கள் மீது அதிக வேலை அழுத்தத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:43
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 7:30 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வேலை தொடர்பான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால், சில காரணங்களால் உங்கள் பயணம் தள்ளிப் போகலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் திருமண வாழ்க்கையின் பழைய நினைவை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். சில பழைய நோயிலிருந்து விடுபடலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள எந்தவொரு வேலையும் முடிவடையும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:35 மணி முதல் காலை 9:50 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று திடீரென்று சில நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் மகிழ்ச்சியை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களை மிகவும் புகழ்வார். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். நீங்கள் பணம் சம்பாதிக்க பல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் மாலை 3 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, சமூக பணிகளில் இன்று உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் பூஜை, யாகம் போன்றவற்றில் பங்கேற்கலாம். நண்பர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இன்று மனதளவில் நன்றாக உணருவீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க இன்று நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, அலுவலகச் சூழல் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் தந்தையிடமிருந்து ஆச்சரிய பரிசு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு உங்களிடமிருந்து திரும்பப் பெறப்படலாம். பண விஷயத்தில் இன்று கலவையான பலன்களைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உங்களுக்கு பல் பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:20 மணி முதல் காலை 10 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று இனம்புரியாத கவலை உங்கள் மன அமைதியைக் கெடுக்கும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, அதை நன்றாகப் பயன்படுத்துங்கள். அலுவலகத்தில், உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9:05 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் செய்யும் வேலைகளில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். திடீர் பண வரவு கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:45 மணி முதல் இரவு 7 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும், உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் தேவை. அலுவலகத்தில், முதலாளி திடீரென்று ஒரு முக்கியமான கூட்டத்திற்கு அழைக்க விடுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், முழு நம்பிக்கையுடன் உங்கள் தரப்பை முன்வையுங்கள். இன்று பணம் தொடர்பான சில முக்கிய வேலைகள் முடிவடையும். இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 9:20 மணி வரை



Click it and Unblock the Notifications