Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 01 December 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பேச்சே பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். டிசம்பர் 01ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-9.00 மணி வரை. எமகண்டம் காலை 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. கேட்டை, மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, மாணவர்கள் கல்வி தொடர்பான புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். வேலையில் இன்று பரபரப்பாக இருக்கும். இன்று நீங்கள் நிறைய அலைய வேண்டியிருக்கும். உங்களின் இந்த பரபரப்பான வழக்கம் உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இன்று நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணர்வீர்கள். ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை மேம்படுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் காலை 11 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்றைய நாள் சிறப்பான தொடக்கமாக அமையும். நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கவிருந்தால், பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசரமாக நிதி முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்வீர்கள். வியாபாரிகள் விரும்பிய லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று மிகவும் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:15 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். இன்று நிதி ரீதியாக மிகவும் விலையுயர்ந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். இன்று உயர் அதிகாரிகள் உங்களால் மிகவும் அதிருப்தி அடையலாம். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். இன்று நீங்கள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், வானிலை மாற்றத்தால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:10 மணி முதல் காலை 11:05 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். இருப்பினும், நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக யாருக்காவது கடன் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், கவனமாக சிந்திக்க வேண்டும். அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வியாபாரிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 8:55 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். இன்று நிறைய பணம் செலவழிக்க நேரிடலாம். அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க வேண்டி வரும். வணிகர்கள் தங்கள் பங்குகளை அதிகரிக்க திட்டமிட்டிருந்தால், முதலில் பழைய பங்குகளை விற்பது நல்லது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு காதுகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:20 மணி முதல் மாலை 4 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. ஓய்வில் கவனம் செலுத்துங்கள். அலுவலகச் சூழல் நன்றாக இருக்கும். வியாபாரிகளின் பெரிய பிரச்சன இன்று தீர்க்கப்படும். குறிப்பாக கூட்டு வியாபாரம் செய்வோர், இன்று நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். தேவையற்ற கோபம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், இன்று நீங்கள் பெரிய செலவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அலுவலகத்தில் உங்களின் அலட்சியம் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். உங்கள் பொறுப்புகளை சரியான நேரத்தில் முடிக்காவிட்டால், உங்கள் முன்னேற்றம் தடைபடும். வியாபாரிகள் இன்று லாபம் ஈட்ட கடுமையாக போராட வேண்டியிருக்கும். வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பழைய உணவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்றைய நாள் பண விஷயத்தில் மிகவும் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் திடீரென்று சில பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களின் வருமானம் உயரும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரிகள் கலவையான பலன்களைப் பெறலாம். வீட்டில் சாதகமான சூழல் இருக்கும். இன்று நீங்கள் உங்கள் உடன்பிறந்தோருடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, காதல் விஷயங்களில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். திருமணமாகாவதர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் செயல்திறன் இன்று உங்கள் முதலாளியை பெரிதும் கவர்ந்திழுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழிலில் வளர்ச்சிக்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் காலை 11:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வணிகர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். உங்கள் கட்டுப்பாடற்ற பேச்சே உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை குடும்பத்தாரின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும். உங்கள் திருமணத்தில் இருந்துவந்த தடைகள் விரைவில் தீர்க்கப்படும். இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக இருதய நோயாளிகள் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:50 மணி முதல் மாலை 3:30 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். சிறு வணிகர்கள் இன்று பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். அரசு விதிகளை மீறுவதைத் தவிர்க்கவும். இன்று வீட்டில் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்த்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டால், அலட்சியமாக இருக்காதீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலையில் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பிய வேலையைத் தேடிக்கொண்டிருந்தால், நீங்கள் வெற்றியைப் பெறலாம். உங்களின் எந்த பெரிய பிரச்சனையும் அன்புக்குரியவரின் உதவியால் தீர்க்கப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் காலை 10 மணி வரை



Click it and Unblock the Notifications











