Latest Updates
-
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா
ஒரு மஞ்சள் கைக்குட்டையால் 931 பேரின் உயிர் பறிக்கப்பட்ட இந்தியாவின் குலைநடுங்கவைக்கும் வரலாறு தெரியுமா?
உலகம் முழுவதும் பல சீரியல் கில்லர்களின் கதைகள் உள்ளன, இந்த சீரியல் கில்லர்களின் கதைகள் பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட பாதிப்பு காரணமாகவோ அல்லது அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவே நடத்தப்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு சீரியல் கில்லரும் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட ஸ்டைலைக் கொண்டிருப்பார்கள்.
மேற்கத்திய சீரியல் கில்லர்கள் மக்களைக் கொள்வதற்கு கத்தி, துப்பாக்கி, சிலசமயம் கற்கள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஒரு இந்திய சீரியல் கில்லர் வெறும் கைக்குட்டையைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 931 பேரைக் கொன்றுள்ளார், அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் மிகக்குறைவு. அவரின் பெயர்தான் தக் பெஹ்ராம். இந்த கொடூர சாதனைக்காக அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர்களின் தலைவலி
சீரியல் கில்லர் தக் பெஹ்ராம் 1765 ஆம் ஆண்டு பிறந்தார். பெஹ்ராம் 1790 முதல் 1840 வரை ஆங்கிலேயர்களுக்கு நிறைய பிரச்சனைகளை உருவாக்கினார். அந்த நேரத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியாவையே ஆண்டுக் கொண்டிருந்தாலும் தக் பெஹ்ராமின் பயங்கரக் கொலைகள் ஆங்கிலேயர்கள் கூட பயப்படும் அளவுக்கு இருந்தது.
அந்த காலகட்டத்தில், குண்டர்கள் மற்றும் கொள்ளையர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஜேம்ஸ் பாட்டன், பெஹ்ராம் பற்றி எழுதினார், அவர் உண்மையில் 931 பேரைக் கொன்றார், மேலும் அவர் இந்த கொலைகளை அனைவரின் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டார்.
தக் என்றால் என்ன?
தக் என்ற சொல் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இந்த சொல் எங்கிருந்து வந்தது என்பது பலருக்கு தெரியாது. 'தக்' என்ற வார்த்தை உண்மையில் வட இந்தியாவின் அவுத்/அவாத் பகுதியில் உள்ள கொள்ளையர்களின் வழிபாட்டு முறையான 'தாக்' என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து வந்தது. இது அதன் உண்மையான சமஸ்கிருத வார்த்தையான "சாகா" என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் மறைவானது அல்லது கண்ணுக்குத் தெரியாதது என்பதாகும்.
பெஹ்ராமின் குழந்தைப்பருவம்
பெஹ்ராம் வெறும் பெஹ்ராமாக இருந்த போது சிறுவயதில் ஒரு கூச்ச சுபாவமுள்ள குழந்தையாக இருந்தார், அவர் தன்னை விட 25 வயது மூத்த ஒரு தக்ஸை சந்திக்கும் வரை மற்றவர்களுடன் பேசுவதையோ அல்லது பழகுவதையோ விரும்பவில்லை. மிகச்சிறிய வயதிலேயே அவர் கைதேர்ந்த கொலைகாரராக மாறினார். 10 வயதிற்குள், பெஹ்ராம் மக்களைக் கொல்லவும், பயமுறுத்தவும் தொடங்கினார். அடுத்த 25 ஆண்டுகளில் அவர் இந்தியாவையே அச்சுறுத்தும் கொலையாளியாக மாறினார். அவர் எப்போதும் தன்னுடன் மஞ்சள் கைகுட்டையையும், நாணயத்தையும் கொலை செய்வதற்காக வைத்திருந்தார்.
மூடநம்பிக்கை
பெஹ்ராம் செய்த நூற்றுக்கணக்கான கொலைகளுக்கு அடிப்படையாக இருந்தது அவரின் மூடநம்பிக்கை. மரணத்தின் தெய்வமான காளி தேவியை வழிபடும் அவர்கள் அப்பாவிகளைக் கொல்வதை தங்கள் கடமையாகக் கருதினர். தங்கள் கொலைகள் காளியைத் மகிழ்ச்சிப்படுத்துவதாக அவர்கள் நம்பினர். உண்மையில் அவர்கள் செய்த எந்த கொலையும் பணத்துக்காக செய்யவில்லை, மாறாக மூடநம்பிக்கையின் பெயரால் செய்யப்பட்டவை.
யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள்?
தாகி பெஹ்ராமின் குழுவினர் வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள், வீரர்கள் மற்றும் யாத்ரீகர்களின் கான்வாய் மீது குறிவைத்தார். பெஹ்ராமின் கும்பலைச் சேர்ந்தவர்கள் மாறுவேடமிட்டு, யாத்ரீகர்களின் கான்வாய்க்குள் நுழைவார்கள். பக்தர்கள் இரவில் தூங்கும் போது, பெஹ்ராமின் கும்பல் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து தாக்கியது.
யாத்ரீகர்கள் தூங்கும் போது, கும்பல் உறுப்பினர்கள் நரியின் அழுகையின் குரலில் ஒருவருக்கொருவர் சமிக்ஞைகளை அனுப்புவது வழக்கம். அதன் பிறகு, பெஹ்ராம் தனது மற்ற கும்பல் உறுப்பினர்களுடன் அங்கு வந்து, மஞ்சள் கைக்குட்டையால் மக்களின் கழுத்தை நெரித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
எப்படி கைதுசெய்யப்பட்டார்?
பெஹ்ராமின் குழுவினர் ஒருபோதும் பெண்கள், முஸ்லிம் சூஃபிகள் மற்றும் தொழுநோயாளிகளைத் தாக்கவில்லை. பெஹ்ராமின் புகழ் இங்கிலாந்து வரை பிரபலமாகியது, எனவே அவரைப் பிடிக்க ஐந்து புலனாய்வுக் குழுக்கள் இந்தியாவிற்கு வந்தன, ஆனால் அவர்களாலும் பெஹ்ராமைப் பற்றி அதிகம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சையத் அமீர் அலி 1832 இல் தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஆங்கிலேயரிடம் சரணடைந்தார், இறுதியாக, 1838 இல், 75 வயதில் பெஹ்ராம் கைது செய்யப்பட்டார்.



Click it and Unblock the Notifications
