Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் 3 யோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Shani Jayanti 2023: நீதிமான் சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தி வைகாசி மாதம் வரும் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது.
சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர். இந்த சனியின் வக்கிர பார்வை விழுந்தால், அதன் விளைவாக பண பிரச்சனைகள் மட்டுமின்றி, உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனியின் தாக்கத்தில் உள்ளவர்கள் சனி பகவான் முறையாக வழிபட்டு வந்தால், அவரால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கலாம். அதுவும் சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை வழிபட்டால் சனியின் அருளைப் பெறலாம்.
இந்த ஆண்டு மே 19 ஆம் தேதி சனி ஜெயந்தி வருகிறது மற்றும் இந்த சனி ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த சனி ஜெயந்தி நாளில் 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்
வேத ஜோதிடத்தின் படி, சனி ஜெயந்தி அன்று ஷோபன் யோகா மாலை 6 மணி வரை நீடித்திருக்கும். அதோடு, கும்ப ராசியில் உள்ள சனியால் சச ராஜ யோகமும், மேஷ ராசியில் குரு, சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும் உருவாகியிருப்பதால், இந்த ஆண்டு சனி ஜெயந்தியானது மிகவும் சிறப்பானது. இந்த 3 யோகங்களால் 4 ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. வியாபாரிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது பல நன்மைகளைத் தரப் போகிறது. ஏனெனில் சனி 9 ஆவது வீட்டிலும், குரு 11 ஆவது வீட்டிலும் உள்ளனர். இதன் விளைவாக நிதி நிலையில் அதிகரிப்பு ஏற்படப் போகிறது. உங்களின் பல கனவுகள் நனவாகப் போகிறது. சனியின் அருளால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தியானது சிறப்பான நன்மைகளை வழங்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் வெற்றி காண்பார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
கும்பம்
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் யோகங்களால் கும்ப ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கான முழு பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் நிலை வலுவாக இருக்கும். உங்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்த வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications