Latest Updates
-
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன?
30 ஆண்டுகளுக்கு பின் விஜய தசமியில் வரும் 3 ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகுது..
Three Rajyoga In Vijayadashami/Dussehra 2023: இந்த ஆண்டு விஜய தசமி அல்லது தசரா அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் விஜய தசமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
அதில் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் இருப்பதால், சச ராஜயோகம் உருவாகியுள்ளது. அதோடு குருவும், சுக்கிரனும் நேருக்கு நேர் அமர்ந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். அத்துடன் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இப்படி விஜய தசமி நாளில் 3 மங்களகரமான யோகங்கள் ஒன்றாக உருவாகியிருப்பதால், அதன் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் விஜய தசமி நாளில் உருவாகியுள்ள 3 யோகங்களால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் விஜய தசமி நாளில் உருவாகியுள்ள 3 ராஜயோங்களால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். சிலர் எதிர்பாராத லாபத்தை வியாபாரத்தில் பெறக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். சிலருக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு விஜய தசமி அன்று உருவாகும் 3 யோகங்களால் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. சிலருக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் இந்த அரிய சேர்க்கையால் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்
விஜய தசமி நாளில் 3 யோகங்களால் கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். துர்கா தேவியின் அருளால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், அதிலிருந்து விடுபடுவார்கள். நிதி நிலை வலுவாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications