Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
100 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் 3 ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Three Rajyoga Formed Simultaneously After 100 Years: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறிக் கொண்டே இருக்கும். அப்படி ராசியை மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் இன்று சூரியன் துலாம் ராசிக்குள் நுழைகிறார். அதே சமயம் மறுநாள் புதனும் துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதே வேளையில் சச ராஜயோகமும், பத்ரா ராஜயோகமும் ஏற்கனவே உருவாகியுள்ளது.

இப்படி ஒரே வேளையில் 3 ராஜயோகங்களானது 100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளன. மேலும் இதன் தாக்கமானது சற்று சிறப்பு வாய்ந்ததாகவும், அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும், இந்த 3 ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல பண வரவையும், தொழிலில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் நல்ல பண ஆதாயமும் கிடைக்கும்.
அதோடு குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினால் அல்லது வேலை செய்ய விரும்பினால், அந்த ஆசை இக்காலத்தில் நிறைவேறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களானது நற்பலனை அள்ளி வழங்கும். முக்கியமாக எதிர்பாராத விதமாக பணம் உங்களைத் தேடி வரும். உங்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் இந்த யோக காலத்தில் பிரகாசிக்கும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். இதுவரை வேலையில் முன்னேற்றத்தைக் காணாமல் இருந்தால், இந்த யோக காலத்தில் உயர் பதவியைப் பெற வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களானது நன்மை பயக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலர் குழந்தைகளால் நல்ல செய்தியைப் பெறகூடும. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம்.
நீண்ட நாட்களாக புதிய வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். புதிய சொத்துக்களை வாங்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications