Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரிகிறதா? அப்போ சனி பகவானின் அருள் உங்களுக்கு இருக்கிறது...!
சனி பகவானுக்கு யாரை பிடிக்குமோ, அவருடைய வாழ்வில் செல்வம், பெருமை மற்றும் புகழில் எந்த குறைவும் ஏற்படாது. ஜோதிடத்தின் படி, சனி பகவானால் யாரேனும் ஆசீர்வதிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் நடக்கவிருந்தாலோ, அது சில அறிகுறிகளை வெளிக்காட்டும். சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார்.
இத்தகைய சனி பகவானின் கோபத்திற்கு ஒருவர் ஆளானால், அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவே சனி பகவானின் அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைத்தால், அவர் வாழ்க்கையில் செல்வம், புகழ், ஆடம்பரம் போன்றவற்றில் ஒருபோதும் குறைவிருக்காது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவானின் அருளை ஒருவர் பெற்றிருந்தாலோ அல்லது பெறவிருந்தாலோ, அவர் சில அறிகுறிகளை உணரத் தொடங்குவார். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
1. ஜோதிடத்தின் படி நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும் போது கருப்பு நாயை பார்த்தாலோ, அது பால் குடிப்பதை பார்த்தாலோ உங்களுக்கு சனி அருள் இருக்கிறது என்று அர்த்தம். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும் என அர்த்தம்.
2. சனிக்கிழமைகளில் செருப்பு திருடு போவது பொதுவாக கோவிலுக்கு சென்றால் காலணிகள் திருடுப் போகும். ஆனால் சனிக்கிழமைகளில் கோவிலுக்கு செல்லும் போது உங்களின் காலணிகள் திருடு போகிறதா? அப்படியானால் சனி பகவானின் அருள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். சனிக்கிழமைகளில் திருடு போகும் காலணிகள், சனி பகவானின் ஆசியைக் குறிக்கும் மற்றும் அதிர்ஷ்ட கதவு திறக்கவிருப்பதைக் குறிக்கிறது.
3. ஜோதிடத்தின் படி பிச்சைக்காரர் சாப்பிடுவதை கண்டால் அது ஒரு சுப அறிகுறியாக கருதப்படுகிறது. அப்போது உங்களுக்கு சனியின் அருளும், ஆசீர்வாதமும் இருக்கிறது என்று அர்த்தம். இதன் மூலம் உங்கள் நிதி நிலை உயரப்போகிறது என்று அர்த்தம்.
4. நீங்கள் எங்காவது கருப்பு பசுவை கண்டாலோ, அல்லது அது பால் கொடுத்து கொண்டிருப்பதை கண்டாலோ சனியின் அருள் கிடைப்பதாக அர்த்தம் என ஜோதிடம் சொல்கிறது. இது உங்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் உணர்த்துகிறது.
5. மரியாதை உயரும் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்க ஆரம்பிக்கிறதா? அப்படியானால் சனி பகவானின் கருணை உங்கள் மீது உள்ளது என்பதற்கான அறிகுறி. சனி பகவான் ஒருவரின் செயலால் மகிழ்ச்சி அடைந்தால், சமூகத்தில் அந்நபரின் நிலை மற்றும் மரியாதை அதிகரிக்க தொடங்கும். இப்படி உங்கள் வாழ்வில் நிகழ்ந்தால், சனி பகவானுக்கு நன்றி கூறி அவரை வணங்க ஆரம்பியுங்கள்...
6. திடீரென்று ஒரு நபர் நிறைய பணம் பெறுகிறார், பணியிடத்தில் முன்னேற்றம் ஆகியவை என்பது சனியின் சிறப்பு ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும் என்பதற்கான அறிகுறியாகும்.
7. ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் சனியின் சுப நிலை, ஒருவரை மிகப்பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றுகிறது. அந்த நபருக்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்க சனி அனுமதிப்பதில்லை. சனியின் அருளால், ஒரு நபர் நிச்சயமாக விபத்து போன்ற அசம்பாவிதங்களில் இருந்து காப்பாற்றப்படுகிறார்.



Click it and Unblock the Notifications