Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
Thaipusam 2025: தைப்பூசம் எதனால் கொண்டாடப்படுகிறது? இந்நாளில் என்ன செய்தால் முருகனின் ஆசி கிடைக்கும்?
Thaipusam 2025: ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் கொண்டாடும் மிகவும் முக்கியமான தினங்களுள் தைப்பூசத் திருநாளும் ஒன்று. இந்நாள் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உரிய நாளாகும். இந்நாளில் முருக பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.
நிறைய பேருக்கு தைப்பூசம் எதனால் கொண்டாடப்படுகிறது என்று தெரியாமல் இருக்லாம். மேலும் இந்த நாளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்வது என்றும் தெரியாமல் இருக்கலாம். எனவே அத்தகையவர்களுக்காக தைப்பூசம் எந்த காரணத்திற்காக கொண்டாடப்படுகிறது மற்றும் அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டின் தைப்பூசம் பிப்ரவரி 11 ஆம் தேதி வருகிறது. இந்த நாளின் சிறப்ப என்னவென்றால், இந்நாளில் தான் பார்வதி தேவி முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வேல் கொண்டு தான் முருகன் அழிக்க முடியாத பல அசுரர்களையும் அழித்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வந்தால், கெட்ட சக்திகள் நம்மை அண்டாமல், அந்த ஆண்டு முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடனும், செல்வத்துடனும் வாழலாம் என்பது ஐதீகம்
அதுவும் 2025 ஆம் ஆண்டின் தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உரிய செவ்வாய்க்கிழமையில் வருவதால், இது இன்னமும் விசேஷம். இந்த செவ்வாய் ஒருவரது கடன் பிரச்சனையை தீர்ப்பதில் முக்கியமானவர். செவ்வாயின் அதிபதி முருகன். இந்த இருவருக்கும் உரிய இந்நாளில் தைப்பூசம் வந்திருப்பது கூடுதல் விசேஷம். இப்படிப்பட்ட தைப்பூச நாளில் முருக பெருமானின் ஆசியைப் பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இப்போது காண்போம்.
* முருகனுக்கு உரிய தைப்பூச நாளில் ஏதாவது இனிப்புக்களை செய்து படைத்து வழிபடுவது நல்லது.
* முருகப் பெருமானுக்கு சிவப்பு நிற பூக்கள் என்றால் பிடிக்கும் எனவே சிவப்பு நிற பூக்களை மாலையாக செய்து, அதை முருகப்பெருமானுக்கு அணிவிக்கலாம்.
* மூன்றாவது முருகப்பெருமானுக்கு சந்தனமும், பன்னீரும் பிடிக்கும். எனவே இந்நாளில் சந்தனத்தையும், பன்னீரையும் ஒரு கண்ணத்தில் முருகப்பெருமான் முன் வைத்து வழிபட்டு, வெளியே செல்லும் போது தினம் அதை நெற்றியில் இட்டு வந்தால், நினைத்த வேலை வெற்றிகரமாக முடிவடையும்.
* சிலரது வீடுகளில் முருகப்பெருமானின் போட்டோவிற்கு பதிலாக வேல் வைத்து வழிபாடு செய்யலாம். அப்படி உங்கள் வீட்டில் வேல் இருந்தால், அதற்கு பூஜை செய்யுங்கள். மேலும், வீட்டில் உள்ளோர் யாரேனும் ஒருவர் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று, அங்குள்ள முருகன் சன்னதிக்கு முன் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வந்தாலே, முருகனின் ஆசி அந்த குடும்பத்திற்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.
* தைப்பூச நாளன்று விரதம் இருப்பதும், இருக்காததும் உங்கள் இஷ்டம். ஆனால் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, முருகனை வழிபட்டு, முருகப்பெருமானுக்கு உரிய மந்திரங்களை சொல்லுங்கள் அல்லது முருகப்பெருமானுக்கு உரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அலங்காரம், வேல் மாறல் மந்திரம், திருமுருகாற்றுப்படை பாடல்களை ஒலிக்கவிட்டு கேளுங்கள்.
* தைப்பூச நாளில் அன்னதானம் செய்வது நல்லது. இப்படி செய்வதன் மூலம், வாழ்க்கையில் நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
* தைப்பூசத்தன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி முருகனுக்கு பூஜை செய்யும் போது, இரண்டு அகல் விளக்கை எடுத்து, அதில் ஒரு விளக்கில் துவரம் பருப்பை பொடி செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் மற்றொரு அகல்விளக்கில் நாட்டுச்சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். பின் இரண்டையும் பூஜை அறையில் வைத்து, வணங்க வேண்டும். பின்பு தீபத்தை குளிர விட்டு, இரவு தூங்கும் முன் அந்த துவரம் பருப்பு பொடியுடன், நாட்டுச்சர்க்கரையை கலந்து, வீட்டில் நிலைவாசலில் விளக்கேற்றும் இடத்தில், இவற்றை தூவி விட்டு தூங்க செல்லுங்கள். மறுநாள் காலையில் அவ்விடத்தை பார்த்தால், நிறைய எறும்புகள் அனைத்தும் அதை சாப்பிடுவதை காணலாம். இப்படி செய்வதன் மூலம், கடன் பிரச்சனை தீர்வதோடு, அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
* இது தவிர பசு மாட்டிற்கு வாழைப்பழத்தை வழங்குவது இன்னும் நல்லது.



Click it and Unblock the Notifications











