Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி சூரிய சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Saturn Venus Conjunction In Aquarius After 30 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் இயக்கங்களினால் சில சமயங்களில் ஒருசில கிரகங்களின் சேர்க்கைகள் பல ஆண்டுகளுக்கு பின் நிகழும். அவ்வாறு நிகழும் கிரக சேர்க்கைகள் அனைத்து ராசிகளிலுமே ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கும்ப ராசியில் ஒரு அரிய சேர்க்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.
அதாவது கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். அதேப் போல் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தான் சுக்கிரனும் கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இம்மாதிரியான திரிகிரக யோகமானது 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையிலும், தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். செல்வம் பெருகும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சூரியன் மற்றும் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பாக பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். முக்கியமாக தந்தை இக்காலத்தில் மிகவும் ஆதரவாக இருப்பார்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சூரிய மற்றும் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். செய்யும் காரியங்கள் மற்றும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண முதலீடு தொடர்பான திட்டங்கள் வெற்றி பெறும். சிலர் இக்காலத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
