Latest Updates
-
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
துலாம் ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அக்டோபர் 19 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது..
Sun Mercury Make Budhaditya Rajyoga In Libra: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 19 ஆம் தேதி புத்திகாரகனான புதனும் துலாம் ராசிக்குள் நுழைகிறார். இப்படி துலாம் ராசியில் சூரியனும், புதனும் ஒன்றாக பயணிப்பதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த புதாதித்ய ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நற்பலனைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். இப்போது துலாம் ராசியில் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அக்டோபர் 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதோடு இந்த ராசிக்காரர்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் மார்கெட்டிங், மீடியா துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வெற்றிகளை குவிப்பீர்கள். வழக்கத்தை விட நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் போடப்படும் திட்டங்களில் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இக்காலத்தில் நீங்கள் தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications