Latest Updates
-
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம்
Karthigai Deepam 2023: கார்த்திகை தீபம் எதனால் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?
Karthigai Deepam 2023: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை அடுத்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் கார்த்திகை தீபம். இந்த கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கார்த்திகை தீபம் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. சொல்லப்போனால் தீபாவளியை விட கார்த்திகை தீப பண்டிகையின் போது வீடுகளானது பல மடங்கு விளங்குகளால் அழகாக அலங்கரிக்கப்படுகிறது.

சரி, இத்தனை ஆண்டுகளாக கார்த்திகை தீப பண்டிகையை கொண்டாடி வருகிறீர்களே, இந்த பண்டிகை எதனால் கொண்டாடப்படுகிறது, அதற்கு பின்னிருக்கும் உண்மையான கதை என்னவென்று உங்களுக்கு தெயுமா? கார்த்திகை மாதமானது முருகப்பெருமான் பிறந்த மாதம் என்பதால், இந்த மாதம் இன்னமும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இப்போது கார்த்திகை தீப பண்டிகையின் பின்னணி கதையைக் காண்போம்.
விஷ்ணு, பிரம்மா சண்டை
ஒருமுறை விஷ்ணு, பிரம்மா இருவரும் யார் உயர்ந்தவர் என்ற ஒரு விவாதத்தில் ஈடுபட்டு, சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இப்படி பிரம்மாவும், விஷ்ணுவும் பயங்கரமாக சண்டை போடுவதால், மற்ற தேவர்கள் கவலையடைந்து சிவபெருமானிடம் சென்று, நடந்ததைக் கூறி, இந்த சண்டையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் பிரம்மா மற்றும் விஷ்ணுவின் முன் தோன்றி, ஒரு பெரிய நெருப்புத்தூண் (ஜோதிர்லிங்கம்) வடிவத்தை எடுத்து, இந்த நெருப்புத் தூணின் தொடக்கத்தையும் முடிவையும் கண்டுபிடிக்குமாறு கூறினார். அதில் யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ, அவரே உயர்ந்தவராக கருதப்படுவர் என்றும் சிவன் கூறினார். பிரம்மாவும், விஷ்ணுவும் அதை ஒப்புக் கொண்டனர்.
அப்போது விஷ்ணு பன்றியாக மாறி நெருப்புத் தூணின் முடிவைக் கண்டுபிடிக்க பூமியை ஆழமாக தோண்டினார். ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் சிவனிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். அதே வேளையில் நெருப்புத் தூணின் தொடக்கத்தைக் கண்டறிய பிரம்மா மேல் நோக்கி அன்ன வடிவில் மேலே பறந்து சென்றார். ஆனால் அவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிவனிடம் வந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறினார்.
சிவபெருமான் பிரம்மா பொய் சொல்வதை அறிந்து, சாபமிட்டார். இதன் மூலம் சிவன் தான் உயர்ந்தவர் என்றும், மற்ற இருவரும் தன்னை விட தாழ்ந்தவர் என்றும் நிரூபித்தார். அப்போது தான் திருவண்ணாமலை பகுதியில் மலை வடிவில் சிவன் காட்சியளித்தார். திருவண்ணாமலை என்பதற்கு புனிதமான நெருப்பு மலை என்று பொருள். இந்த நிகழ்வின் நினைவாகவே திருவண்ணாமலையில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. மேலும் கார்த்திகை தீபத்தன்று இந்த திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது.
மற்றொரு கதை
கார்த்திகை தீபம் குறித்து கூறப்படும் மற்றொரு கதை தான் இது. இதில் கார்த்திகை தீபம் பண்டிகையானது சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகப்பெருமானுடன் தொடர்புடையதாக கூறுப்படுகிறது. சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து தோன்றிய 6 தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த 6 தீப்பொறிகளும் சரவண பொய்கை ஏரியில் 6 கார்த்திகை பெண்களால் பராமரிக்கப்பட்டு 6 குழந்தையாக இருந்தது. கார்த்திகை தீப நாளில் பார்வதி தேவி இந்த 6 குழந்தைகளையும் ஒரு குழந்தையாக இணைத்தார். இதனாலேயே முருகப் பெருமானுக்கு ஆறுமுகன், ஆறுமுகம், கார்த்திகேயன் என்ற வந்தது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.)



Click it and Unblock the Notifications