Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
வெறும் 38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகச்சிறிய போர் இதுதான்? அது எந்த நாடுகளுக்குள் நடந்தது தெரியுமா
வரலாற்றில் போர்கள் எப்போதுமே பேரழிவுகளை ஏற்படுத்துவதாகவே இருந்துள்ளது. தற்போது உலகின் பல நாடுகளில் போர் மூளும் அபாயம் நிலவுகிறது. எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகளும் மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக உருவாகும் என்று கணித்துள்ளனர். ஒவ்வொரு முறை போர்கள் உருவாகும் போதும் அது அந்த பிராந்தியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
போரில் ஈடுபட்ட நாடுகள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும். ஏனெனில் போர்கள் மாதங்கள் தொடங்கி சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். வரலாற்றில் பல தசாப்தங்கள் நடைபெற்ற பல கொடூரமான போர்கள் உள்ளன. ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற உலகின் மிகவும் குறுகிய கால போர் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா? உண்மைதான் இந்த போர் வெறும் 38 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த போர் யாருக்குள் நடைபெற்றது, அதற்கு காரணம் என்ன மற்றும் எப்படி முடிவுக்கு வந்தது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

போர்களும், வரலாறும்
உலகெங்கிலும் பல நாடுகளுக்கு இடையே போர்கள் நடந்துள்ளன, இந்த உலகின் மிகக் குறுகிய போர் எப்போது, யாருக்கு இடையே நடந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, பல ஆண்டுகளாக நீடித்த பல போர்கள் நடந்துள்ளன. அவற்றின் அழிவு பயங்கரமானது, மேலும் இந்தப் போர்கள் அவற்றின் போர் தந்திரங்களுக்கு பெயர் பெற்றவை.
முதல் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும் கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை நீடித்தன, ஆனால் வரலாற்றின் பக்கங்களில் வெறும் 38 நிமிடங்களில் முடிவடைந்த போரின் பதிவு உள்ளது.
பிரிட்டனுக்கும் சான்சிபாருக்கும் (தற்போது தான்சானியாவின் ஒரு பகுதி) இடையே ஆகஸ்ட் 27, 1896 அன்று போர் நடந்தது. இந்தப் போர் ஒரு அரசியல் தகராறின் காரணமாக நடந்தது. இந்த போரில், பிரிட்டிஷ் இராணுவம் எந்த பெரிய முயற்சியும் இல்லாமல் வெறும் 38 நிமிடங்களில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1893 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசாங்கம் சான்சிபாரை மேற்பார்வையிட சையத் ஹமாத் பின் துவைனியை நியமித்தது. அவர் அமைதியாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஆகஸ்ட் 25, 1896 அன்று மரணமடைந்தார். ஹமாத்தின் மரணத்திற்குப் பிறகு, அவரது மருமகன் காலித் பின் பர்காஷ் தன்னை சான்சிபாரின் சுல்தானாக அறிவித்தார். அந்த நேரத்தில், பிரிட்டன் சான்சிபாரின் மீது மேலாதிக்கத்தைக் கொண்டிருந்தது. எனவே, பர்காஷ் அங்கு சுல்தானாக மாறியது பிரிட்டன் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஹமாத்தின் உறவினர் ஹமூத் பின் முகமதுவை அவரது வாரிசாக நியமிக்க விரும்பியதால், காலித்தை சுல்தான் பதவியில் இருந்து நீக்க பிரிட்டன் உத்தரவிட்டது.
பிரிட்டன் அரசின் உத்தரவுகளைப் புறக்கணித்து, புர்காஷ் தனது அரண்மனையைச் சுற்றி சுமார் 3000 வீரர்களை நிறுத்தினார். இதைப் பற்றி பிரிட்டன் அறிந்ததும், காலித்தை ராஜினாமா செய்யச் சொன்னது, ஆனால் காலித் அதற்கு அடிபணியவில்லை. பிரிட்டனும் காலித்தை எச்சரித்தது. பின்னர் ஆகஸ்ட் 27 அன்று, ஆங்கிலேயர்கள் சான்சிபார் மீது தாக்குதலைத் தொடங்கினர். போர் தொடங்கியபோது, காலித்தின் இராணுவம் வெறும் 38 நிமிடங்களில் சரணடைந்தது.
இந்தத் தாக்குதலில், காலித்தின் 500 வீரர்கள் காயமடைந்தனர். அதேசமயம் ஒரே ஒரு பிரிட்டிஷ் வீரர் மட்டுமே காயமடைந்தார். அதன் பின்னர் காலித் ஜெர்மன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து இறுதியில் நாடுகடத்தப்பட்டார். ஆங்கிலேயர்கள் சுல்தான் ஹமூதை நியமித்தனர். இதுதான் உலக வரலாற்றின் மிகவும் குறுகிய போராக நினைவு கூறப்படுகிறது. இது பிரிட்டிஷ் பேரரசின் வலிமையைக் காட்டியது மற்றும் காலனித்துவ சக்திகளுக்கும் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டியது.



Click it and Unblock the Notifications












