Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம்
7 முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழைத்த அதிசய மனிதர் யார் தெரியுமா? கடைசில அவர் எப்படி செத்தார் தெரியுமா?
இந்த பூமியை உருவாக்கியதும், இன்றுவரை அழியாமல் பாதுகாப்பதும் இயற்கைதான். இயற்கையின் கட்டுப்பாட்டில் பூமி இருக்கும் வரைதான் பூமி பாதுகாப்பாக இருக்க முடியும். இயற்கையிடம் பல சிறப்பான சக்திகள் உள்ளது, அதிலொன்றுதான் மின்னல். மின்னல் என்பது இயற்கையின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கணிக்க முடியாத சக்திகளில் ஒன்றாகும்.
மின்னலால் தாக்கப்படுவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். திரைப்படங்களில் வேண்டுமென்றால் மின்னலால் தாக்கப்பட்டால் ஹீரோவுக்கு பல சக்திகள் கிடைக்கலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் மின்னல் தாக்குவது என்பது உடனடி மரணத்தை அல்லது உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும் ஒரு ஆபத்தான நிகழ்வாகும்.

மின்னலால் தாக்கப்படுவது என்பது ஆபத்தானது அதேசமயம் அரிதானது. உண்மையில் ஒருவரின் 80 வருட வாழ்நாளில் மின்னல் தாக்கும் வாய்ப்புகள் 10,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும். இருப்பினும், அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு, மின்னல் என்பது நெருங்கிய நண்பர் போல உள்ளது. அது அவரது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு வழக்கமான பகுதியாக மாறியது.
முன்னாள் அமெரிக்க பார்க் ரேஞ்சரான ராய் சி. சல்லிவன், 35 ஆண்டுகளில் ஏழு முறை மின்னலால் தாக்கப்பட்டு அதிலிருந்து தப்பிப்பிழைத்து, மிகவும் வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் உலக சாதனைகளில் ஒன்றைப் படைத்துள்ளார். விஞ்ஞானிகள் இன்னும் மின்னலின் நடத்தையை ஆய்வு செய்து கொண்டிருக்கும் வேளையில், சல்லிவன் ஏன் பல முறை தாக்கப்பட்டார் என்பதை யாராலும் விளக்க முடியாது.
ஸ்பார்க் ரேஞ்சர்
அவரது கதை உலகில் நடக்கவே முடியாது என்று பலரும் நினைப்பதாகும். தொடர்ச்சியான மின்னல் தாக்குதல்களால் அவர் சக ரேஞ்சர்களால் "ஸ்பார்க் ரேஞ்சர்" என்று செல்லமாக அழைக்கப்பட்டார், மேலும் மின்னலுடனான அவரது சந்திப்புகள் அவருக்கு கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றுத் தந்தன. அவர் தீவிரமாக முயற்சித்தும் அவரால் ஒரு மின்னல் தாக்குதலை கூட தடுக்க முடியவில்லை.
முதல் தாக்குதல்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் படி, ராய் சல்லிவனின் மின்னலுடனான தொடர்பு ஏப்ரல் 1942 இல் தொடங்கியது. வர்ஜீனியாவில் உள்ள ஷெனாண்டோ தேசிய பூங்காவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எரியும் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து தப்பிக்கும்போது மின்னல் தாக்கியதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. அதுதான் அவரது முதல் தாக்குதல். அந்த தாக்குதலால் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது, ஆனால் அவரது பெருவிரல் நகத்தை மட்டுமே இழக்க நேரிட்டது. சல்லிவனின் மின்னல் வரலாற்றில் இது வெறும் தொடக்கம் மட்டுமே.
இரண்டாவது தாக்குதல்
ஜூலை 1969 இல், அவர் ஒரு லாரியை ஓட்டிச் செல்லும்போது அவருக்கு இரண்டாவது மின்னல் தாக்குதல் ஏற்பட்டது. மின்னல் தாக்குதல் அவரை மயக்கமடையச் செய்தது, அவரது புருவங்களை எரித்தது, மேலும் அவரது கைக்கடிகாரத்தை கருகச் செய்தது. ஒரு வருடம் கழித்து, ஜூலை 1970 இல், தோட்டத்தில் இருக்கும்போது அவர் மீண்டும் மின்னலால் தாக்கப்பட்டார், இந்த முறை அவரது இடது தோள்பட்டையில் பெரிய வடு ஏற்பட்டது.
ஏப்ரல் 1972 இல், ஒரு காவலர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மீண்டும் அவரை மின்னல் தாக்கி அவரது தலைமுடி தீப்பிடித்தது. பின்னர் ஒரே வருட இடைவெளியில் ஆகஸ்ட் 1973 இல் அவர் தனது காரில் இருந்தபோது மீண்டும் மின்னலால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலின் போது அவரது கால்கள் எரிந்து, அவரது தலைமுடி மீண்டும் எரிந்தது.
இறுதி தாக்குதல்
ஜூன் 1976-இல் ராய் நடந்து கொண்டிருந்தபோது ஆறாவது முறை மின்னல் தாக்கியது. அப்போது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது மற்றும் அவரது தலைமுடி மீண்டும் எரிந்தது. இறுதியாக, ஜூன் 1977 இல், ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி, அவரது மார்பு மற்றும் வயிறு எரிந்தது.
இப்படி ஆபத்தான பல தாக்குதல்கள் இருந்த போதிலும், ராய் அவை அனைத்திலிருந்தும் தப்பினார். கின்னஸ் உலக சாதனைகளின்படி, அவரது கதை மின்னலுடன் முடிவடையவில்லை. அவர் 1983 இல் 71 வயதில் இறுதியாக இயற்கை மரணமடைந்தார். அனைத்திற்கும் மேலாக ராய் அவரது துணிகளை காயவைக்கும் போது கூட மின்னல் அதனை தாக்கியது, ஆனால் ராய் அந்த முறை காயமின்றி தப்பினார். ராய் இத்தனை முறை மின்னலால் தாக்கப்பட்டதற்க்கும், அவர் உயிர் பிழைத்ததற்கும் காரணம் இன்னுமும் கண்டறியப்படவில்லை.



Click it and Unblock the Notifications












