Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
400 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சனி ரவி புஷ்ய யோகம்: இந்த 5 ராசிகளுக்கு நல்ல நிதி பலன்கள் கிடைக்கும்...
Shani Ravi Pushya Yoga After 400 Years: 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். அதுவும் நவம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த நவம்பர் மாதத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றங்கள் நிகழ்வதால், இந்த மாதமானது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையையே முழுமையாக மாற்றக்கூடியதாக இருக்கவுள்ளது.
அதோடு தீபாவளிக்கு முன் சுக்கிர பெயர்ச்சி நிகழ்கிறது. அதைத் தொடர்ந்து மறுநாளே சனி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். இது தவிர தீபாவளிக்கு முன் ஒரு இரண்டு நாட்கள் மிகவும் மங்களகரமான நாட்களாக, பலருக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய நாட்களாக இருக்கவுள்ளது.

ஏனெனில் இந்த இரண்டு நாட்களும் ரவி புஷ்ய யோகமும், சனி புஷ்ய யோகமும் உருவாகவுள்ளது. அதுவும் நவம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை சனி புஷ்ய யோகமும், நவம்பர் 5 ஆம் தேதி ரவி புஷ்ய யோகமும் உருவாகவுள்ளது.
400 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் யோகம்
ஜோதிடத்தின் படி, சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு புஷ்ய நட்சத்திரத்தில் சனியும், சூரியனும் பயணித்து அபூர்வ யோகத்தை உருவாக்குகிறார்கள். தீபாவளிக்கு முன் வரும் இந்த யோக காலத்தில் ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கினால், அது வீட்டில் பெருகும் என்று கூறுப்படுகிறது.
மேலும் சனி, சூரியனால் உருவாகும் இந்த யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. சொல்லப்போனால் சில ராசிக்காரர்களைத் தேடி பணம் வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
நவம்பர் 4-ல் புஷ்ய யோகம்
புஷ்ய நட்சத்திரமானது நவம்பர் 04 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த யோகம் நவம்பர் 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை நீடித்திருக்கும். இந்த காலகட்டத்தில் சூரியன் மற்றும் சனி புஷ்ய யோகம் உருவாகிறது.
அத்துடன் சனி பகவான் சச ராஜயோகத்தையும், குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும், இது தவிர சங்க, லட்சுமி, ஷர்ஷ் சரல், மித்ரா போன்ற யோகங்களும் கூடுவதால், இந்நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, தீபாவளிக்கு முன் இந்த அரிய யோகம் உருவாகியிருப்பதால், 5 ராசிக்காரர்கள் மிகவும் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக மேஷம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சனி, குரு மற்றும் லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசியைப் பெறவுள்ளார்கள். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதோடு நல்ல பண வரவும் கிடைப்பதோடு, நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications