Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சனி உருவாக்கிய கேந்திர திரிகோண ராஜயோகத்தால் 2025 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Shani Made Kendra Trikona Rajyog: கிரகங்களில் நீதிமான் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியர். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இந்த சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிக்கவுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பின் சனி கும்ப ராசியில் நுழைந்ததால் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.
சனி உருவாக்கியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். இதன் விளைவாக தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பார்கள். இப்போது சனி உருவாக்கியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கேந்திரி திரிகோண ராஜயோகமானது சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் முதல் வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் பெரும்பாலான துறைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். கடின உழைப்பின் பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செய்தால், அதில் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எளிதில் எடுப்பீர்கள். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது அதிர்ஷ்ட வீடான 9 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு 2025 ஆம் ஆண்டு வரை இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல உச்சத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications