Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சனியின் உக்கிர பார்வையால் அடுத்த 10 மாதம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Saturn's Evil Eye: நவகிரகங்களில் ஒருவரது கர்மாவிற்கு ஏற்ற பலனை அளிக்கும் கிரகம் தான் சனி. இந்த சனி 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிப்பார்.
முக்கியமாக 2024 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் தான் பயணிக்கவுள்ளார். இதனால் இந்த ஆண்டு சனி பகவானுக்கு உரிய ஆண்டாக கூறப்படுகிறது. வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சகதி வாய்ந்த கிரகங்களுள் ஒன்றாகும்.

சனி ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும். அதுவே சனியின் உக்கிர பார்வை விழுந்தால், நிறைய கஷ்டங்களை சந்திக்க நேரிடும்.
தற்போது சனியின் உக்கிர பார்வை ஒருசில ராசிக்காரர்களின் மீது உள்ளது. இந்த பார்வை விழுந்தால், வாழ்க்கையில் பல சவால்களையும், பல தடைகளை சந்திக்க நேரிடும். இப்போது சனியின் உக்கிர பார்வையால் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
சனியின் உக்கிர பார்வை கடக ராசிக்காரர்கள் மீது விழுந்துள்ளதால், இந்த ராசிக்காரர்கள் பல கஷ்டங்களையும், தடைகளையும் சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில், அடுத்த 10 மாத காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் சற்று கவனமாக, பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மீதும் சனியின் உக்கிர பார்வை விழுவதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். முக்கியமாக பண பிரச்சனைகளால் சிரமப்பட நேரிடும். அடுத்த 10 மாத காலம் வலிமிக்கதாக, தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும். எனவே அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாக இருங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமாக இருந்தாலும், சனியின் உக்கிர பார்வை விழுவதால், இந்த ராசிக்காரர்கள் மிகுந்த வேலை அழுத்தம், மன அழுத்தம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர நேரிடும். மகரம் சனி பகவானின் ராசியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சனி சுய ஒழுக்கம், பொறுப்பு மற்றும் நீண்ட கால திட்டமிடல் ஆகியவற்றிற்கு வலுவான முக்கியத்துவம் கொடுக்க வைப்பார்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடக்கிறது. மேலும் சனி பகவான் முதல் வீட்டில் பயணித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கிளர்ச்சி மற்றும் பற்றின்மை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சனியின் உக்கிர பார்வை விழும் காலத்தில், சண்டை சச்சரவுகள் தேடி வரும். இருப்பினும் யாருடனும் சண்டைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். சிறு வாக்குவாதங்கள் கூட பெரிய இழப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும் சனி பகவான் அடுத்த 10 மாத காலம் பல சோதனைகளை அளிப்பார். பொறுமையுடன் அதை கையாள முயற்சி செய்யுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மீது சனியின் உக்கிர பார்வை விழுவதால், உங்களின் சமூக தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் எதிர்மறையாக பாதிக்கப்படும். அதோடு சனி பகவான் பலவிதமான சோதனைகளை செய்வார். மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். எனவே அடுத்த 10 மாதம் புத்திசாலித்தனமாகவும், கவனமாகவும் நடந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications