Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
கும்ப ராசியில் வக்ரமாகும் சனி: ஜூன் முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Saturn Retrograde In Aquarius 2024: வேத ஜோதிடத்தில், நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களைத் தருவார். மேலும் கிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியின் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான், 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் தான் இருப்பார்.

ஆனால் இந்த சனி பகவான் 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக வக்ர நிலையில் தான் சனி பகவான் கும்ப ராசியில் பயணிக்கவுள்ளார்.
சனி வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் சனி வக்ரமாவதால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், ஜூன் மாதத்திற்கு பின் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜூன் முதல் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல பண ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் பிள்ளைகள் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசயின் 4 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல நன்மைகளைப் பெறுவார்கள். சிலர் புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
