Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சனி பகவானின் வக்ர நிலையால் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்காரங்க நிறைய பணத்தை சம்பாதிக்க போறாங்க..
Saturn Retrograde 2023: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் ஒரு நீதிமானாக கருதப்படுகிறார். கிரகங்களில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதால், அவரது ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் சற்று கூடுதலாக இருக்கும்.
மேலும் சனி பகவானின் இயக்கத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார்.

அதோடு, ஜூன் மாதத்தில் சனி பகவான் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, பலவீனமாக இருக்கும். அதுவும் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது.
அதுவும் சனி பகவான் நவம்பர் வரை வக்ர நிலையில் இருப்பதால், 3 ராசிக்காரர்கள் நல்ல பெயரையும் புகழையும் பெறுவதோடு, நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். இப்போது சனி வக்ர நிலையால் நிறைய பணத்தை சம்பாதிக்கப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி வக்ர நிலையில் இருப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த 5 மாத காலம் அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் சனி பகவான் 10 ஆவது வீட்டில் வக்ர நிலையில் உள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். அதுவும் தனியார் கம்பெனியில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முக்கியமாக இதுவரை கிடைக்காத தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
வக்ர நிலையில் சனி பகவான் இருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வாரி வழங்கப் போகிறது. சிம்ம ராசியில் சனியின் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே இக்காலத்தில் பணிபுரிபவர்கள் பல புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம்.
அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளமும், பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதோடு இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் அடுத்த 5 மாதம் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். மொத்தத்தில் அடுத்த 5 மாதம் மிகச்சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி. இந்த சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால் மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த 5 மாத காலம் சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications