Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனி செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் அதிகரிக்கப் போகுது.. உஷார்..
Saturn Mars Conjunction In Aquarius After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தனது எதிரி மற்றும் நட்பு கிரகங்களின் ராசிக்கு இடம் பெயர்ந்து பயணிக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்க உருவாகும். அப்படி கிரகங்களில் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தனது மூலதிரிகோன ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மார்ச் மாதம் கும்ப ராசியில் நுழைகிறார். இதனால் கும்ப ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் சனி, செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஆயினும் 3 ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் சேர்க்கை காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் கஷ்டங்களும் அதிகரிக்கலாம். இப்போது சனி செவ்வாய் சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி, செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மோசமடையலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. புதிய தொழிலைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தாயாரின் ஆரோக்கியம் மோசமடையலாம். ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நோய்களால் அவதிப்படலாம். சிலருக்கு பழைய நோய்கள் மீண்டும் எழ வாய்ப்புள்ளது. மேலும் நிதி இழப்புகளுக்கும் வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்வதாக இருந்தால், அதை இக்காலத்தில் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். முக்கியமாக கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். கடன் தொல்லையால் அவதிப்படக்கூடும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வணிகர்கள் தங்கள் வணிகத்தில் சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். எனவே இக்காலத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications