Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
சனி உருவாக்கிய சச மகாபுருஷ் யோகம்: 2025 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Shash Mahapurush Yoga: நவகிரகங்களில் சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் என்பதால், ஒருவரது வாழ்வில் சனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.
மேலும் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடியவர். எனவே பாவம் செய்தவர்கள் நிச்சயம் சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அதே சமயம் நல்ல செயல்களை செய்தால், அவர்களுக்கு சனி பகவான் அள்ளி வழங்குவார்.

இப்படிப்பட்ட சனி பகவான் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். இந்த கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிப்பார். சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்த சச மகாபுருஷ் யோகம் உருவாகிறது.
இந்த யோகமானது சில ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பல நல்ல பலன்களை வாரி வழங்கும். இப்போது இந்த சச மகாபுருஷ் யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
சச மகாபுருஷ் யோகம் எப்போதும் உருவாகும்?
சச மகாபுருஷ் யோகமானது ஐந்து மகாபுருஷ் யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகம் சனி உச்சம் பெற்ற அல்லது சந்திரனின் மையத்தில் இருக்கும் போது, அல்லது சந்திரனில் இருந்து 1,4,7,10 ஆகிய வீடுகளில் துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் சனி இருந்தால் உருவாகும்.
தற்போது சனி கும்ப ராசியின் முதல் வீட்டில் இருப்பதால், சச மகாபுருஷ் யோகம் உருவாகியுள்ளது. இப்போது சச மகாபுருஷ் யோகத்தால் 2025 வரை எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சச மகா புருஷ் யோகம் நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படுவதோடு, நல்ல லாபத்தையும் தரும். இதுவரை நீங்கள் பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இனிமேல் பண பிரச்சனைகள் நீங்கி புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கும் சனி பகவான் உருவாக்கிய சச மகாபுருஷ் யோகம் மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவு கிடைப்பதால், செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் மறுபடியும் தொடங்கப்பட்டு சிறப்பாக முடிக்கப்படும். இதுவரை உங்கள் நிதி நிலை பலவீனமாக இருந்தால், இனிமேல் 2025 வரை நிதி நிலை வலுவாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கும் சச மகாபுருஷ் யோகம் அபரிமிதமான பலன்களைத் தரும். அதுவும் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். இந்த தைரியத்தால் பல சவால்களையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு பதவி உயர்வை வழங்குவார்கள். வியாபாரம் செய்து வருபவர்கள், நல்ல லாபத்தைக் காணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் எப்போதும் தீங்கு இழைக்கமாட்டார். ஏனெனில் இது அவரது சொந்த ராசி. அதுவும் சச மகாபுருஷ் யோகம் உருவாகியிருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கும். குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். திருமண வாழ்வில் இருந்த டென்சன் நீங்கி, தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சற்று வலுவாக இருக்கும். இதுவரை நீங்கள் எதிலாவது முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

