Latest Updates
-
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சனி உருவாக்கும் சச ராஜயோகம்: 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Saturn Made Shash Rajyoga In 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமானாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
இத்தகைய சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணிப்பதால் பஞ்சமகா புருஷ் யோகங்களில் ஒன்றான சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது ஒருவரை செல்வந்தராக்கும். மேலும் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்து வெற்றி மேல் வெற்றியை பெற வைக்கும்.

சனி பகவான் கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பதால், 2024 ஆம் ஆண்டு முழுவதும் இந்த யோகத்தின் தாக்கம் இருக்கும். இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. ஏன், செல்வந்தராகவும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் லக்ன வீட்டில் சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். தொழிலில் கணிசமான வளர்ச்சி ஏற்படும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் தள்ளிப் போய் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். உறவுகள் இனிமையாக இருக்கும்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். இன்ஜினியரிங் மற்றும் டென்னிக்கல் துறையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ஆண்டில் சனி பகவானின் அருளால் நிதி நிலையில் திடீர் உயர்வு ஏற்படும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்களும் அமையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications