Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கும்பத்தில் வலுவாகும் சனி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கையில் பணம் அதிகம் சேரப்போகுது..
2023 மார்ச் 18 ஆம் தேதி, அதாவது இன்று சனி பகவான் தனது சொந்த ராசியில் மிகவும் வலுவான நிலையில் இருக்க போகிறார்கள். சனியின் இந்த சக்தி வாய்ந்த நிலையால் 4 ராசிக்காரர்கள் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் அது வலுவாகவோ அவ்வது பலவீனமாகவோ இருக்கும். மேலும் கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களையும், சிலர் எதிர்மறையான பலன்களையும் பெறலாம்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் ஜனவரி 17 முதல் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மார்ச் 18 ஆம் தேதி, அதாவது இன்று சனி பகவான் தனது சொந்த ராசியில் மிகவும் வலுவான நிலையில் இருக்க போகிறார்கள்.

சனியின் இந்த சக்தி வாய்ந்த நிலையால் 4 ராசிக்காரர்கள் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். தந்தையுடனான உறவு மேம்படும். உங்களின் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உருவாகும். அரசாங்கத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் இக்காலத்தில் ஆன்மீகம், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். காதல் விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் நிதி ரீதியாக இனிமேல் மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். இக்காலத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். எண்ணெய், பெட்ரோலியம் தொடர்பான தொழிலை செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில், அடுத்த 3 மாத காலம் மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி உள்ளார். இந்த முதல் வீட்டில் சனி வலுவாவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். மேலும் முதல் வீட்டில் இருக்கும் சனியால் சச மகாபுருஷ யோகம் உருவாகியுள்ளதால், சமூகத்தில் இந்த ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் தொழில் மற்றும் வேலை ரீதியாக இக்காலமானது சிறப்பாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல திருமண வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications