Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, இந்த மாதிரியான பெண்கள் அவர்களது கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாம்..
Samudrik Shastra: ஜோதிடத்தில் பல கிளைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சாமுத்ரிகா சாஸ்திரம். இந்த சாஸ்திரத்தின் மூலம், ஒருவரது உறுப்பின் அமைப்பு, நிறம், வடிவம் போன்றவற்றைக் கொண்டு அந்நபரின் தலைவிதி, எதிர்காலம் மற்றும் குணங்கள் போன்றவை கணித்து கூறப்படுகின்றன. இது தவிர உடல் அமைப்பு மற்றும் நபரின் உடல் உறுப்புகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், அந்நபரின் வாழ்க்கை தொடர்பான தகவல்களையும் பெற உதவுகிறது.
அதுவும் இவற்றின் உதவியுடன் எந்த மாதிரியான பெண் கணவன் மற்றும் மாமியார் வாழ்க்கையில் செல்வம், பெருமை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டு வருவார் என்பதை அறிய முடியும். நீங்கள் ஒருசில பெண்களை பார்த்திருக்கலாம். அதாவது, அந்த பெண் மாமியார் வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த வீட்டில் உள்ளோர் நல்ல முன்னேற்றத்தை கண்டிருப்பார்கள் மற்றும் சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் இருப்பதைக் காணலாம்.

நீங்கள் எந்த வகையான பெண்கள் அவர்களது கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே சாமுத்ரிகா சாஸ்திரம் கூறும் அத்தகைய பெண்கள் யாரென்பது கொடுக்கப்பட்டுள்ளது.
நெற்றியின் அகலம்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒரு பெண்ணின் நெற்றி 3 விரல்களை விட அகலமாகவும், அரை நிலவு வடிவத்திலும் இருந்தால், அப்பெண் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் திருமணத்திற்கு பின் அதிர்ஷ்டசாலிகளாக மாறுவர் மற்றும் அந்த வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும்.
நெற்றியில் திரிசூல அடையாளம்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, நெற்றியில் திரிசூலத்தின் அடையாளத்தைக் கொண்ட பெண்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு செல்வம் பெருகுவதோடு, சமூகத்தில் கௌரவமும் அதிகரிக்கிறது.
கண்களின் வடிவம்
கண்களுக்கு கீழேயும், மேலேயும் வெளிரிய சிவப்பு நிற சருமத்துடன், கண்களின் கருவிழி கருப்பாகவும், வெள்ளைப் பகுதி பால் வெள்ளை நிறத்திலும் இருக்கும் பெண்கள், தங்கள் கணவன் மற்றும் மாமியார்களுக்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள்.
பெண்களின் இடுப்பு மற்றும் நடை
பெண்களின் இடுப்புப் பகுதி மெல்லியதாகவும், நடையானது ஃபிளமிங்கோவைப் போல் இருந்தால், அப்பெண் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார்கள். இந்த பெண்களை திருமணம் செய்த பின் அப்பெண்ணின் கணவன் மற்றும் அந்த வீட்டில் உள்ளோர் அனைத்து வகையான மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள் என சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது.
கால் விரல்களின் வடிவம்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, கால் விரல் வட்ட வடிவிலும் நீளமாகவும், சிவப்பாகவும் இருக்கும் பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இத்தகைய பெண்கள் தங்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications