Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
Republic Day 2024: இந்தியா தனது முதல் குடியரசு தினத்தை எப்பொழுது, எங்கு கொண்டாடியது?
Republic Day 2024: இந்தியா சுமார் 200 ஆண்டுகளாக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து வந்தது. ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு தான் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்திய சுதந்திரம் அடைந்ததும் டாக்டர். அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த தினத்தையே நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
இதற்குப் பிறகு இந்தியா தனித்த குடியரசு நாடாக மாறியது. இதன்படி ஜனவரி 26,1950 அன்றைய நாளை நாம் குடியரசு நாளாக அறிவித்தோம். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு நாளாக கொண்டாடி வருகிறோம். 2024 ஆம் ஆண்டில் வெள்ளிக்கிழமை குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தலைமையில் பிரமாண்டமான அணிவகுப்பும் நடைபெறும். இன்றைய கால கட்டத்தில் குடியரசு தினமானது மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் நம் இந்தியா முதல் குடியரசு தினத்தை எவ்வாறு எப்பொழுது கொண்டாடியது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
முதல் குடியரசு தினம் எப்படி கொண்டாடப்பட்டது?
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களுடைய பாரம்பரியம், கலாச்சாரம், தேசத்தின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளின் காட்சியை மாபெரும் அணிவகுப்பாக கண்டு களிக்கின்றனர். ஜனவரி 26, 1950 யை இந்தியா குடியரசு தினமாக அறிவித்தது 1929 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின் ஆதிக்க அந்தஸ்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் 'பூர்ண ஸ்வராஜ்' என்று அறிவித்த நாளை ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1934 ஆம் ஆண்டில், எம்.என்.ராய் இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்கினார். பின்னர் இதற்காக ஒரு அரசியலமைப்பு சபையை உருவாக்கினார். இதன்படி 1940 ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அந்த சபையின் குழுத் தலைவராக டாக்டர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அதன்படி 1949, நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்பை உருவாக்க எடுத்துக் கொண்ட நாட்கள்
நம் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாற நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் முக்கிய அம்சமாக இருந்தது. நம் இந்திய அரசியலமைப்பை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆனது. இதற்காக 165 நாட்கள் 11 அமர்வுகள் நடத்தப்பட்டன.
இந்தியா தனது முதல் குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும், பிரமாண்டத்துடனும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. முதல் குடியரசு தினம் கொண்டாடும் போது முதல் ஜனாதிபதியாக டாக்டர். ராஜேந்திரபிரசாத் இருந்தார்.
அந்தக் காலத்தில் குடியரசு தினத்தன்று மக்கள் உற்சாகமாக மேளங்கள் அடித்தும், மகிழ்ச்சியான ஊர்வலங்களை நடத்தியும், சங்குகளை ஊதியும், தேசபக்தி பாடல்களை பாடியும் கொண்டாடி வந்தனர்.
சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மிகப்பெரிய குடியரசு நாடாக உலகளவில் உயர்ந்து நின்றது. ஜனநாயக அரசாங்கத்தின் பாராளுமன்ற வடிவத்துடன் மிகப்பெரிய குடியரசு நாடாக மாறியது.
முதல் குடியரசு தின விழா அணிவகுப்பு
1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ல் சட்டமன்றத்தில் 308 உறுப்பினர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்தது. 1950 மற்றும் 1954 க்கு இடையில் இர்வின் ஸ்டேடியம் (தற்போது தேசிய அரங்கம்), கிங்ஸ்வே, செங்கோட்டை மற்றும் ராம்லீலா மைதானங்களில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. 1955 ஆம் ஆண்டு முதல் ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்புக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலைவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார். அந்த வகையில் 1950 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் தலைமை விருந்தினராக இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜனாதிபதி சுகர்னோ இருந்தார்.
ஜனாதிபதியின் காவலர் மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் முதலில் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதன் பிறகு தேசிய கீதமானது இசைக்கப்படும். அதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகளுடன் கூடிய வணக்கமானது வைக்கப்படும். தலா மூன்று சுற்றுகள் சுடும் '25-பாண்டர்ஸ்' எனப்படும் இந்திய இராணுவத்தின் ஏழு தலைமை நியதிகளுடன் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பில் எல்லா இராணுவ வீரர்களும் பங்கேற்று விழாவை சிறப்பிப்பார்கள்.



Click it and Unblock the Notifications











