Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
ரத்தன் டாடா ஏன் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை? அதற்கு பின்னால் இருந்த சோகமான காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தனது 86 வயதில் உயிர் துறந்தார். ரத்தன் டாடாவின் இறப்பு அவரது நிறுவனத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பேரிழப்பாகும். அவர் எப்போதும் மக்கள் இதயத்திலும், நினைவிலும் இருப்பார்.
மிகப்பெரிய செல்வந்தராக இருந்த போதும், டாடா பத்ம விபூஷண் விருது பெற்றவராக இருந்தபோதும், அவரது சாதனைகள் மற்றும் சமூகப் பணிகளின் பட்டியல் முடிவில்லாதது. பல சாதனைகளுக்கு சொந்தமான ரத்தன் டாடா இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே இருந்துவிட்டார்.

ரத்தன் டாடா மிகவும் அரிதாகவே பேட்டிகள் கொடுப்பார். ஒருமுறை அவர் 'ரெண்டெஸ்வஸ் வித் சிமி கரேவால்' நிகழ்ச்சியில் தோன்றினார், அந்த நிகழ்ச்சியில் அவரிடம் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " என் வாழ்க்கையில் நடந்த தொடர்ச்சியான சம்பவங்கள் (என்னை திருமணம் செய்வதிலிருந்து தடுத்தது), அந்த நேரத்தில் நான் வேலையில் இருந்தேன். நான் சில சமயங்களில் திருமணம் செய்து கொள்வதை நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை " என்று பதிலளித்தார்.
இருப்பினும், அவர் நான்கு முறை காதலித்ததாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் எப்படியோ, அது நிகழவில்லை. சில சமயங்களில் அவர் வாழ்க்கையில் தனிமையாக உணர்வதை அவர் ஒப்புக்கொண்டார். "மனைவி அல்லது குடும்பம் இல்லாததால் நான் தனிமையாக உணர்கிறேன், சில சமயங்களில் அதற்காக ஏங்குகிறேன். அதேசமயம் சில நேரங்களில் மற்றவர்களின் உணர்வுகள் அல்லது பிறரின் கவலைகளைப் பற்றி கவலைப்படாமல் எனது சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கிறேன்" என்று டாடா கூறினார். சுவாரஸ்யமாக இந்த பேட்டியை எடுத்த சிமி கரேவாலுடன் ரத்தன் டாடா காதல் உறவில் இருந்தார். அவர் 2011 இல் ஒரு பேட்டியில் அதை ஒப்புக்கொண்டார்.
இது மிகவும் பழைய பேட்டியாக இருந்தபோதும், சமீபத்தில், ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே உடனான உரையாடலின் போது டாடா தனது முதல் காதலைப் பற்றியும், அவரை ஏன் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். அவரின் முதல் காதல் பற்றி கூறுகையில், "நான் LA இல் காதலித்தேன் மற்றும் கிட்டத்தட்ட திருமணம் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் அதே நேரத்தில், ஏழு வருடமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த என் பாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் தற்காலிகமாக நான் அவரை பிரிய முடிவு செய்தேன், நான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர் என்னுடன் இந்தியாவுக்கு வருவார் என்று நினைத்தேன், ஆனால் 1962 ஆம் ஆண்டு, இந்திய-சீனா போரின் காரணமாக, அவருடைய பெற்றோர் இந்தியாவிற்கு அவரை அனுப்ப விரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து எங்கள் உறவு முறிந்தது." என்று அவர் கூறினார்.
2011 ஆம் ஆண்டு CNN உடனான நேர்காணலில், பயம் மற்றும் பல்வேறு சூழ்நிலைகள் பல சந்தர்ப்பங்களில் திருமணம் செய்து கொள்வதற்கான தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வழிவகுத்தது என்று டாடா கூறினார். "நான் நான்கு முறை திருமணம் செய்து கொள்வதற்கு மிகவும் நெருக்கமாக வந்தேன், ஒவ்வொரு முறையும் பயம் அல்லது வேறுசில காரணங்களுக்காக நான் பின்வாங்கினேன். ஒவ்வொரு சூழ்நிலையும் வித்தியாசமாக இருந்தது, ஆனால் அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்களைப் பார்க்கும்போது, அது ஒரு மோசமான விஷயம் அல்ல" என்று அவர் விளக்கினார். அவரது கடந்தகால உறவுகளைப் பற்றி பேசும் போது, ஒருவேளை அவர் திருமணம் செய்திருந்தால், அது அவரது வாழ்க்கையில் வேறுவிதமான சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார்.



Click it and Unblock the Notifications
