Latest Updates
-
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது..
மீனம் செல்லும் ராகு: அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Rahu Transit 2023: ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். நவகிரகங்களிலேயே சனிக்கு அடுத்தப்படியாக மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்கள் என்றால் அது நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தான். இவ்விரு கிரகங்களும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்கள்.
அந்த வகையில் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களும் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார்கள். தற்போது ராகு மேஷ ராசியில் குரு பகவானுடன் இணைந்து, குரு சண்டாள யோகத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த யோகமானது அக்டோபர் 30 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

ஏனெனில் இந்த ராகு கேது பெயர்ச்சியின் போது ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். ராகு மீன ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியானது சிறப்பாக இருக்காது. மிகுந்த உடல் சோர்வு, நிறைய செலவுகள், டென்சன் நிறைந்த குடும்ப வாழ்க்கை போன்றவற்றை சந்திக்க நேரிடும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள். பணியிடத்தில் எவ்வித நற்செய்திகளையும் பெற முடியாது.
செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வருமானம் குறைவாகவே இருக்கும். மிகுந்த மன உளைச்சலை சந்திக்க நேரிடும். இதய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்து இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். மிகுந்த நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாமியாருடன் எந்த பரிவர்த்தனைகளையும் வைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் அதிக பணம் கொடுக்க வேண்டாம். உங்கள் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் பேச்சே பல வேலைகளை கெடுக்கலாம். வணிகர்களுக்கு வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். ராகுவின் நிலையால் உங்கள் வேலையில் மாற்றங்களைக் காணலாம். நீதிமன்ற விவகாரங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. சொத்தை விற்க விரும்பினால், நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைத்தால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி நல்ல பலனைத் தராது. மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். சிறு விஷயங்களுக்கும் ஆழமாக யோசிப்பீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.
சிலருக்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். யாரையும் நம்பாதீர்கள். வேலைகளில் தடைகளை சந்திக்கக்கூடும். பணப்பற்றாக்குறையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் குறையும். குடும்பச் சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications